Monday, September 22, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 21

அல்-அமீன் மெட்ரிக்குலேஷன் பள்ளி...

பள்ளியின் உள்ளே நுழையும்போதே பொதுத்தேர்வின் பரபரப்பு தொற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது. மாணவர்கள் இங்கும் அங்குமாய் சென்று வந்துகொண்டிருந்தனர்.

பேருந்து பள்ளியின் வாயிலைக் கடந்து உள்ளே சென்றது. இன்னொரு பேருந்தில் மாணவிகள் தனியாக வந்து இறங்கினார்கள். அவர்களுடன் வந்திருந்த இரெண்டு ஆசிரியர்களும், மாணவர்களையும் மாணவிகளையும் வரிசையில் நிறுத்தி வைத்துக்கொண்டிருந்தனர். ஷங்கர், குமார், கிருஷ்ணா, பாலா மற்றும் பாபு ஆகியோர் தனியாக நின்று படித்துக்கொண்டிருந்தனர். அவர்களையும் அழைத்து, வரிசை எண் பிரகாரம் நிற்க சொன்னார் லீலா மிஸ்.


"டேய், ஹால் டிக்கெட் கொண்டு வந்தியா?" நட்டிடம் கேட்டான் பாலா.


"அய்யய்யோ............" தலையில் கைவைத்தபடி அதிர்ச்சியாகி நின்றான்.


"போச்சு போ.... வீட்டுக்குக் கிளம்பு"


"இப்போ என்னடா பண்ணறது?" பயத்தின் உச்சத்திற்கு சென்றான் நட்டு.


"அட தூ.... டேய், ஹால் டிக்கெட் எல்லாம் நம்ம கைக்கு வரவே இல்லை. அவங்க தான் வெச்சிருக்காங்க" என்றான் பாபு.


"ஆமால்ல..... மறந்துட்டேன். நல்லவேளை...” என்று பெருமூச்சுவிட்டான் நட்டு.


"உன்னை மாதிரி ஆளுங்ககிட்ட எல்லாம் ஹால் டிக்கெட் கொடுத்தா என்ன ஆகுறது? உன் மறதிக்கு ஒரு அளவே இல்ல?"


"ஹிஹி... மறந்துட்டேன்" வழக்கமான பதில் வந்தது நட்டிடமிருந்து.


பரீட்ச்சை அறை மிகப்பெரியதாக இருந்தது. இவ்வளவு பிரம்மாண்டமான அறையை இவர்கள் பள்ளியில் பார்த்ததில்லை. ஒரே அறையில் கிட்டத்தட்ட தொண்ணூறு பேர் அமர்ந்து பரீட்ச்சை எழுதக்கூடியதாய் இருந்தது. வரிசை எண்ணின் அடிப்படையில், ஒவ்வொருவராக உள்ளே அனுப்பப்பட்டனர். ஒவ்வொரு இருக்கையின் மேல், அங்கு அமர வேண்டிய மாணவர்களின் வரிசை எண் எழுதப்பட்டிருந்தது. அவர்களுடைய வரிசை எண்ணெய் தேடிப்பார்த்து, அவரவர் அவரவர் இடங்களில் அமர்ந்தனர்.


90 பேர் அமரக்கூடிய அறை என்பதால், இவர்கள் ஆறு பெரும் ஒரே அறையிலேயே அமர்ந்தனர். ஆனால், ஒவ்வொருவர் ஒவ்வொரு மூலையில் அமர்ந்திருந்தனர். ஒரு பலகையில் இரெண்டு பேர் அமரும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு பலகையிலும் இருவேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அமர்ந்திருந்தார்கள்.ஜாடையில் அனைவரும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.


முதல் பரீட்ச்சை தமிழ் முதல் தாள் என்பதால், அனைவரும் டென்ஷன் அதிகமின்றி காணப்பட்டனர். பேனா, பென்சில், ஸ்கேல் முதலியவற்றை சரிபார்த்துக்கொண்டனர். சிறிது நேரம் கழித்து, தேர்வு கண்காளிப்பாளர்கள் இருவர் வந்தனர். அனைவரும் எழுந்து வணக்கம் கூறி, பின் அமர்ந்தனர். நேரம் செல்ல செல்ல, மாணவர்களிடையே கொஞ்சம் டென்ஷன் ஏறத்துவங்கியது.


அந்த இரு கண்காளிப்பாளர்களில் ஒருவர், பலமுறை கேட்டு சலித்திருந்த அதே பல்லவியை மீண்டும் பாடினார் - "யாராவது 'பிட்டு' வெச்சிருந்தா இப்போவே குடுத்திருங்க. பறக்கும் படை வந்து பிடிச்சா உங்க வாழ்க்கையே வீணாயிரும்". யாரும் அதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், அவர் சொல்லி முடித்த சில நிமிடங்களில் ஒரு சில மாணவர்கள், அவர்கள் எடுத்து வைத்திருந்த 'பிட்டு'களை எல்லாம் எடுத்து வந்து அவரிடம் கொடுத்தனர். அவரும் அவர்களை அதட்டக்கூட செய்யாமல், அவற்றை வாங்கி வைத்துக்கொண்டிருந்தார்.


'பறக்கும் படை' யைப் பற்றி, முதல் முறையாக பரீட்ச்சை எழுதுவோருக்கு ஒரு கற்பனை இருக்கும். வேற்று கிரகத்து ஜந்துக்கள் போல் கூட சிலர் அவர்களை மனதிற்குள் சித்தரித்து வைத்திருப்பார்கள். ஆசிரியர்கள் அவர்களை பற்றிக்கொடுக்கும் 'பில்ட்-அப்'புகளே அதற்குக் காரணம். நட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. அனைவரும் அடுத்த நாள் பரீட்ச்சையைப் பற்றியே அதிகம் பேசிக்கொண்டிருக்க, இவன் "பறக்கும் படை"யைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான்.


விடைத்தாள்கள் அனைவருக்கும் முதலில் விநியோகம் செய்யப்பட்டது. அவற்றை நிரப்புவது எப்படி என்று விளக்கிக்கொண்டிருந்தனர். அது முடிந்த பிறகு, மணி அடித்தவுடன் வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டது. முதலில் வினாத்தாள் வாங்கிய ஷங்கர், அவசர அவசரமாக அதை படித்துப்பார்த்துவிட்டு, பின்னால் ஆர்வத்துடன் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து, சைகையிலேயே "ஈசி" என்று கூறினான்.


"அப்பாடா" என்று இருந்தது மற்றவர்களுக்கு. விறுவிறுப்பாக பரீட்ச்சை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அமைதியில் மூழ்கியிருந்த அந்த அறையில், திடீரென ஒரு சலசலப்பு ஏற்பட்டது. தடதடவென சத்தம் எழுப்பியவாறு, மூன்று பேர் அந்த அறையினுள் நுழைந்தனர். சொல்லிவைத்தாற்போல் மூவருமே "சஃபாரி சூட்" அணிந்திருந்தனர். அதில் ஒருவர் மட்டும் ஆஜானுபாகுவாக, கன்னங்கரேலென்று இருந்தார். அந்த மூவரில், அவருடைய உருவமே மிரட்டும் வகையில் இருந்தது. உள்ளே நுழைந்தவர்கள், ஒவ்வொரு வரிசையாக சென்று மாணவர்களை பார்வையிட்டனர்.


யாரேனும் ஒரு மாணவனிடம் சென்று, அவனை சோதனை செய்தனர். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நட்டிற்கு உள்ளூர பயம் தொற்றிக்கொண்டது. பரீட்ச்சை எழுதுவதை நிறுத்திவிட்டு, அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த உயரமான ஆசாமியைப் பார்த்து பயந்துகொன்டிருந்தான். வேறு ஒரு மாணவனை சோதனை செய்துகொண்டிருந்த அவர், சற்றும் எதிர்பாராமல் நட்டைப் பார்க்கவே, அவன் செய்வதறியாது திகைத்தான். உடனே, பார்வையை மாற்றவேண்டும் என்று கூடத்தோன்றாமல், அவரைப் பார்த்து 'திருதிரு'வென முழித்துக்கொண்டிருந்தான்.


சனியனை தூக்கி பனியனில் போட்டுக்கொண்டதுபோல் ஒரு காரியத்தை செய்து விட, அவர் நேராக நட்டிடம் வந்தார்.


"என்னடா முழிக்கிற?, 'பிட்டு' வெச்சிருக்கியா??"


"....... இல்ல..."


"சட்டையை தூக்கு...." - அவர் இப்படி சொன்னவுடன், இதை அறையின் மற்ற மூலைகளிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த கிருஷ்ணா, குமார், பாபு, பாலா மற்றும் ஷங்கர் அனைவரும் சைலண்டாக சிரித்துக்கொண்டிருந்தனர்.


ஒரு ஐந்து நிமிடம் சோதனை செய்துவிட்டு,


"உட்காரு......" என்று அதட்டினார்.


விட்டால் போதும் என்று, அவர் சொன்னவுடன் அமர்ந்து கடகடவென எழுத ஆரம்பித்தான். அப்போது பேப்பரைப் பார்த்து எழுத ஆரம்பித்தவன், பரீட்ச்சை முடியும் வரை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.


பரீட்ச்சை முடிந்து அனைவரும் வெளியில் கூடினர்.வெளியில் வந்தவர்களிடம் பரீட்ச்சையைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார் லீலா மிஸ். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு, அனைவரும் நட்டை பிடித்துக்கொண்டனர்.


" பிட்டும் அடிக்காம, காப்பியும் அடிக்காம அவங்ககிட்ட எப்படி டா மாட்டின?" - ஆரம்பித்து வைத்தான் பாபு.


"தெரியல டா... நான் சும்மா பாத்துக்கிட்டு இருந்தேன். அந்த ஆளு நேரா என்கிட்டே வந்துட்டான்"


"என்னமோ பெரிய ஃபிகரு வந்த மாதிரி வாயைப் பிளந்து பாத்துக்கிட்டு இருந்தா இப்படித்தான்..."


"அந்த ஆளு 'சட்டையைத் தூக்கு'ன்னு சொன்ன உடனே, எனக்கு சிரிப்பு தாங்கல"


"நல்ல வேளை அதோட விட்டாரு"


"கிளாஸ் ரூம் முதல், எக்சாம் ஹால் வரை - எங்கே போனாலும் காமெடியில உன் கொடிய நட்டுட்ற... கிரேட் டா...."


இப்படி ஏகப்பட்ட கமெண்டுகள் மாறி மாறி பறக்க, மிக விரைவில் இந்த சம்பவம் அவர்கள் பள்ளி முழுவதும் பிரபலமானது.


கணக்குப் பரீட்ச்சை வரும் வரை, அனைத்தும் நன்றாகவே சென்றது....


தொடரும்....

3 comments:

Bala said...

dei ..
natu..
paathuko, unkau ellam build up kuduthu oru episodaiyeey waste pani irkom..
innamum indha maadhiri thrillinga edhavadhu panreeya...

P.S: Nut is working in CTS at present.
But a week before TCS bus le yaeri TCS ku poitu anga security kita sema adi vaangitu share auto pidichu office poi irukan..

Anonymous said...

Shankar mattum eppadi episodela nalla peru vangurarnu oorukulla oru kelvi.

_vasagargal

narayanan said...

What happend in the maths exam?? curios to knw..