Monday, September 08, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 19

"தலைமறைவா? என்னடா, கொலை பண்ணிட்டு பதுங்குற மாதிரி சொல்லற?" என்று கலவரத்துடன் கேட்டான் குமார்.  


"வேற வழி இல்ல...." 

குமாரின் அப்பாவிற்கு, ஷங்கரின் யோசனை சரியாகப்பட்டது. போலீசின் தலையீடு இல்லாமல் இருக்க, இப்படி செய்வதே சரி. கேஸ் பதிவாகிவிட்டால், அது வேறு பெரிய தொல்லை என்பதால், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமாரை எங்கேயாவது அனுப்பி வைப்பதே சரி என்று நினைத்தார்.

"எனக்கும் அந்த கவுன்சிலரைத் தெரியும். நான் போய் அவரைப் பாத்துட்டு வர்றேன். அதுவரைக்கும் இவனை எங்கே அனுப்புறது?" 

"மாமா வீட்டுக்கு..." என்று குமார் சொல்லி முடிப்பதற்குள், "அங்கேயெல்லாம் வேண்டாம்" என்றார் அவன் அப்பா.

உறவினர்கள், நண்பர்கள் என்று யார் வீட்டிலும் வேண்டாம் என்று முடிவு செய்து, குமாரின் அப்பாவின் நண்பர் ஒருவர் திருநாகேஸ்வரத்தில் இருக்கிறார் என்றும், அங்கு சென்று இருப்பது நல்லது என்றும் முடிவு செய்யப்பட்டது.

"டேய், அநியாயத்துக்கு 'பில்ட்-அப்' குடுக்குற மாதிரி இருக்கே டா..." என்று ஷங்கரின் காதைக்கடித்தான் நட்டு. 

"டேய், அடிபட்டவன் சம்பவம் நடந்து 24 மணி நேரத்துக்குள்ள புகார் கொடுத்தா, கேள்வியே கேட்காம போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போயிடுவாங்க. விசாரணை எல்லாம் அங்கே தான் நடக்கும். பத்தாக்குறைக்கு இவன்கிட்ட லைசென்ஸ் வேற கிடையாது. பெருசா ஒண்ணும் ஆகாது. ஆனாலும், போலீஸ் ஸ்டேஷனுக்கு எல்லாம் போயிட்டு வரணும். இது எல்லாம் நடக்காம இருக்குறதுக்குத்தான் இந்த ஏற்பாடு" .

குமாருக்கு கால் அதிகமாக வலித்தது. இரெண்டு பேர் உதவி இல்லாமல் அவனால் நடந்து செல்ல இயலவில்லை. இவன் இவ்வளவு கஷ்டப்படுவதைப் பார்த்து அவன் அம்மாவின் கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

சம்பவத்தைக் கேள்விப்பட்டு, குமாரைப் பார்ப்பதற்காக உறவினர்கள் நிறைய பேர் வரத்துவங்கினர். நேரத்தை வீணடிக்காமல், கவுன்சிலரை உடனே சென்று பார்க்க வேண்டும் என்று குமாரின் அப்பா கிளம்பினார். 

"மிஞ்சிப் போனா ஒரு நாள் அங்கே தங்க வேண்டியது வரலாம். சீக்கிரம் தயாராகுங்க. நான் கவுன்சிலரைப் பார்த்து பேசிட்டு வந்துடறேன்".

முடிவுசெய்தபடியே குமாரை திருநாகேஸ்வரத்திற்கு அழைத்துச்செல்ல டாக்சி வரவழைக்கப்பட்டது. டாக்சி வந்த சிறிது நேரத்தில் குமாரின் அப்பா அங்கு வந்தார். அனைவரும் ஆவலுடன் அவரைப் பார்க்க,

"இன்ஸ்பெக்டர் ரவுண்ட்ஸ் போயிருக்காராம். கவுன்சிலர்கிட்ட சொல்லிட்டேன். இன்ஸ்பெக்டர் வந்ததும் தகவல் சொல்ல ஏற்பாடு பண்ணிருக்கார்" என்றார். அனைவரும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். டாக்சியைத் திருப்பி அனுப்பிவிடலாமா என்று கேட்டபோது, குமாரின் அப்பா,

"வேண்டாம். எதுக்கும் இப்போ அங்கே கிளம்பிப் போறது தான் நல்லது. ஒருவேளை அவன் கம்ப்ளைன்ட் பண்ணியிருந்தா, சிக்கலாயிடும்" என்றார். இதுவும் சரிதான் என்று, நட்டும் ஷங்கரும் அவனை இருபக்கமும் பிடித்துக் கொண்டு, டாக்சியில் அமர்த்தினர். குமாருடன், அவன் அம்மாவும் வண்டியில் ஏறினார்.

"இன்னிக்கு ராத்திரி மட்டும் தான். அதுக்குள்ள எல்லாம் சரியாயிடும்" - குமாரிடம் கூறினான் ஷங்கர். குமார் கலவரத்துடன் காணப்பட்டான். வலியைவிட, முகத்தில் பயம் அதிகமாகத் தெரிந்தது. ஷங்கர் கூறியதைக் கேட்டு தலையசைத்தவன், ஷங்கரிடம்

"டேய், பாபு கிட்ட நான் மன்னிப்புக் கேட்கணும். முட்டாள்த்தனமா நடந்துகிட்டேன்" என்றான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல, அவனுக்கும் உன்மேல கோபம் எல்லாம் கிடையாது. அதை நினைச்சு கவலைப் படாதே. பத்திரமா போயிட்டு வா..." என்று கூறிவிட்டு வழியனுப்பினான். 

என்ஜினை உயிர்ப்பித்தார் டிரைவர். சிறிதுநேரம் அதைக் கத்தவிட்டுவிட்டு, வண்டியைக் கிளப்பினார். வண்டி நகர்வதற்குள் எதிரே போலீஸ் ஏட்டு ஒருவர் டி.வி.எஸ் 50யில் வந்து வழிமறித்து நின்றார்.  

அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. வண்டியைக் கிளப்பிக் கொண்டு போவதா, இல்லை காத்திருப்பதா என்று டிரைவருக்குத் தெரியவில்லை. சூழ்நிலை அவருக்குப் புரியாததால், நகர ஆரம்பித்த வண்டியை 'பிரேக்'போட்டு நிறுத்தினார்.பின்னால் அமர்ந்திருந்த குமார், பதட்டத்துடன், "சீக்கிரம் போங்க" என்று கதற, குமாரின் அம்மாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த பதற்றத்தில் டிரைவர் என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்தம்பித்தார். அந்த ஏட்டு, காரையும் அதில் அமர்ந்திருந்தவர்களையும் பார்த்து விட்டதால், குமாரின் அப்பா, டிரைவரிடம் "கொஞ்சம் இருப்பா...." என்று கூறினார். அவர் அப்படிக்கூறவும், என்ஜினை அணைத்தார் டிரைவர். குமாருக்கு பயத்தால் வியர்த்துக் கொட்டியது. ஷங்கரும் நட்டும் அங்கேயே நின்றுகொண்டிருந்தனர். அந்த ஏட்டு, தனது வண்டியை நிறுத்திவிட்டு, குமாரின் அப்பாவிடம் வந்தார். 

"இது, 66ம் நம்பர் வீடு தானே?"

"ஆமா....."  

"இங்கே குமார்ங்குறது......"  

அந்த ஏட்டு இப்படிக்கேட்டவுடன், அனைவருக்கும் இதயத்துடிப்பு அதிகமானது. குமாருக்கோ, ஒரு நிமிடம் இதயம் துடிக்க மறந்தது. 

"ஆமா.... என் பையன் தான்"

"வீராசாமின்னு ஒருத்தர் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கார். ஆக்சிடண்ட் கேஸு. அவர் இருக்காரா?"

"இப்போ தான் இது விஷயமா கவுன்சிலர் கிட்ட பேசிட்டு வர்றேன். அவர் இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லி பாத்துக்குறேன்னு சொன்னார்..."  

"அதெல்லாம் எனக்குத் தெரியாது சார்.... குமாரை ஸ்டேஷனுக்கு அழச்சிட்டு வந்து விசாரிக்க சொன்னதே அவரு தான்" 

குமாரின் அப்பாவிற்கு பேச்சேவரவில்லை. என்ன சொல்லி சமாளிப்பது என்றே தெரியவில்லை. குமார் பயத்தால் உறைந்தான். எங்கேயோ தப்பு நடந்திருக்கிறது என்பதை உணர்ந்த ஷங்கர், யாரிடமும் சொல்லாமல் அந்த இடத்திலிருந்து சென்றான். 

-கட்-

கவுன்சிலர் வீடு...  

அழைப்பு மணியை அழுத்திவிட்டு, இருப்புக் கொள்ளாமல் காத்திருந்தான் ஷங்கர். நல்ல வேளையாக அவரே வந்து கதவைத் திறந்தார். 

"சார்.... என் பேரு ஷங்கர்" தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, வேகமாக நடந்ததையெல்லாம் சொல்லி முடித்தான் ஷங்கர்.  

"உடனே வாங்க சார்.... இல்லேன்னா, அவனை அழச்சிட்டு போயிருவாங்க" என்றான். 

"நீ முன்னால போய்கிட்டே இரு.... நான் உடனே வந்துடறேன்"  

"இல்ல சார்..... நீங்க வாங்க, உடனே போகலாம்" - ஒரு வழியாக அவரைக் கையுடன் அழைத்து வந்தான் ஷங்கர். 

-கட்-

குமார் வீட்டு வாசல்...

"அவருக்கு அடிபட்டிருக்கிறதால கார்லயே வரட்டும். டிரைவர், வண்டியை நேரா தாலுக்கா போலீஸ் ஸ்டேஷனுக்கு விடு" டிரைவரிடம் அவரே சொல்லிவிட்டு, பதிலை எதிர்ப்பார்க்காமல், தன் வண்டியை எடுத்தார் ஏட்டு. 

"உடனே வாங்க. வராம போனா, அரெஸ்ட் வாரண்ட் குடுத்திருவாங்க"

இந்த நேரத்தில் ஷங்கர், அந்த கவுன்சிலருடன் அங்கு வந்தான். நேராக அந்த ஏட்டை எதிர்கொண்டார் அவர். 

"எந்த ஸ்டேஷன்? இன்ஸ்பெக்டர்கிட்ட தகவல் சொல்ல சொல்லியிருந்தேனே"  

"எனக்கு தெரியாது சார். அவர் சொன்னதால தான் நான் வந்தேன்" 

"உள்ள வாங்க" என்று கூறி, அவரை குமாரின் வீட்டினுள் அழைத்துச்சென்றார். 

அங்கிருந்து அந்த இன்ஸ்பெக்டரை தொலைபேசியில் அழைத்து, விவரத்தைக் கூறினார். பின்பு, அந்த ஏட்டையே இன்ஸ்பெக்டரிடம் பேசச்சொல்லி, கைப்பேசியை அவரிடம் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் கூறியதன் பெயரில், அந்த ஏட்டு கிளம்பத்தயாரானார்.

நிம்மதியுடன் வீட்டினுள் நுழைந்தான் குமார். டாக்சி திருப்பி அனுப்பப்பட்டது.

"அப்போ நான் கிளம்புறேன்...." என்று காதை சொறிந்துகொண்டு நின்றவரிடம், ஒரு ஐம்பது ரூபாய் தாளைக்காட்டியவுடன், பல்லிளித்துக்கொண்டே அதை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச்சென்றார். 

"ரொம்ப ரொம்ப நன்றி சார்... இந்த உதவியை நான் என்னைக்குமே மறக்க மாட்டேன்" குமாரின் அப்பா அந்த கவுன்சிலரிடம் கூறினார்.  

"இரெண்டு தெரு தள்ளியிருந்தனால சீக்கிரம் வரமுடிஞ்சது. இந்தத்தம்பிதான் என்னைக் கையோட அழச்சிட்டு வந்துச்சி... இல்லேன்னா எனக்கு விஷயமே தெரிஞ்சிருக்காது. ஏதோ ஒரு சின்ன கம்யுனிகேஷன் கேப். நான் சொன்ன தகவல், இன்ஸ்பெக்டருக்கு போய் சேரல....."  

"ஏதோ, எல்லாம் நல்லபடியா முடிஞ்சதே....." கவுன்சிலருக்கு காபி கொடுத்து உபசரித்துவிட்டு, அவர் சென்றவுடன், 

"உனக்கு தான்ப்பா நன்றி சொல்லணும்..." என்று குமாரின் பெற்றோர் ஷங்கரிடம் கூற, ஷங்கர், " அதெல்லாம் எதுக்கு...." என்றான்.

"நான் இந்தப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சிடறேன். இப்போவே அவனை நேரில் போய்ப் பார்த்து, எவ்வளவு காசு வேணுமோ கொடுத்து செட்டில் பண்ணிடறேன்" என்றார். 

"அது மட்டுமில்ல அங்கிள், கவுன்சிலர் முன்னிலையில எழுதி வாங்கிடுங்க. இப்போ சரின்னு தலை ஆட்டிட்டு, அப்புறம் பிரச்சனை பண்ணுவானுங்க" என்றான் ஷங்கர்.  

"நிச்சயமா" - சொல்லிவிட்டு கிளம்பிச்சென்றார் அவர்.  

குமாரின் வீடு, புயல் அடித்து ஓய்ந்ததுபோல் இருந்தது. குமாரின் அம்மாவின் முகத்தில் புன்னகை தெரிந்தது. குமார், ஷங்கரிடம் ஒன்றுமே பேசவில்லை. குமார், நட்டு, ஷங்கர் அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். ஷங்கரைப் பார்த்து, குமார்

"டேய், என்ன சொல்லறதுன்னே தெரியல.." என்று கண்கலங்கினான்.  

"டேய், இப்போ நீயும் நன்றியெல்லாம் சொல்லி என்னை அந்நியப்படுத்தாதே" என்று கூறிக்கொண்டிருக்கும்போதே, அழைப்பு மணி ஒலித்தது. நட்டு சென்று திறந்து பார்த்தபோது, அங்கு பாபு நின்றுகொண்டிருந்தான்.....

தொடரும்...

9 comments:

Anonymous said...

So Touching da Mama...

- Mani

Anonymous said...

gowri periya aaluthaan ne... counsellor ellam kaiyoda kutitu vandu..

un influence aa kaatita...

Anonymous said...

his week too good.. that too shankar's role awesome

narayanan said...

wonderful...touching machi...

Bala said...

dei, epdi da ipdi ellam...
thaaaana varutho..

aama kumar ku ivlo adi patu irku naanum Dinesh um ennada panitu irundhom..
sollavey illa....

Anonymous said...

gud keep going
-reddiar-

Anonymous said...

good..keep posting
-chettiyar-

Kool Guy said...

dai.. konjam namma characteroda getha kootu da... innamum comedianaagave potray pannitrukka...

Anonymous said...

dae kool guy , adu thaan da unmai. namma kadaila yen da poi sollnaum..

Dae gowri nattu romba aluguraan da, so avanukku oru fight, oru puch dialogue vara maadiri next episode pannu

Nattu poduma da....