'சேட்டை'ய ராஜாக்கள் - 8
அனைவரது பார்வையும் பாபுவின் கை மீதே படிந்திருந்தது. அந்த அரங்கமே மௌனத்தில் மூழ்கியிருக்க, மேஜிக் நிபுணர் மட்டும் வாயில் வந்ததை மந்திரம் என்ற பெயரில் உளறிக்கொண்டிருந்தார். பாபு அதை மெல்ல வெளியில் எடுக்க, அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. கையில் 'பிரா'வுடன் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தான் பாபு.
கையில் அதை பிடித்துக் கொண்டு, கூச்சத்தில் பாபு நெளிந்து கொண்டிருக்க, கிருஷ்ணா, மொட்டை, குமார், ஷங்கர் மற்றும் நட்டு ஆகியோர் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர். மேடையில் நின்றுகொண்டிருந்தபடியே அவர்களைப் பார்வையிலேயே பொசுக்கினான் பாபு. பற்றாக்குறைக்கு அந்த மேஜிக் ஆசாமி வேறு, "இந்த வயசுல நீ இதை நினைச்சுக்கிட்டியா" என்று கேட்டு ஜோக்கடிக்க, பாபுவின் முகம் கோபத்தால் சிவந்தது. ஒருவழியாக கைதட்டல் மற்றும் சிரிப்பலை அடங்கியதும், பாபு இறங்கி நேரே அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்தான். மக்கள் அவனைத் திரும்பிப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, அவனுக்குக் கோபம் தலைக்கேறியது. சிறிது நேரத்தில் அடுத்த மேஜிக் வித்தையைக் காட்ட ஆரம்பித்தவுடன், மக்களின் கவனம் அதில் திரும்பியது. பாபு யாருடனும் பேசவில்லை. மேஜிக் ஷோ முடிந்ததும், கூட்டம் கலையத் துவங்கியது. ஆறு பெரும் வெளியில் வந்து நடந்துகொண்டிருந்தனர். யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் சிரிப்பை மட்டும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டிருந்தனர். அந்த மௌனத்தை கலைக்கும் விதமாக, மொட்டை, பாபுவிடம்
"டேய், 'பிரா' வெறும் பத்து ரூபா தானா??" என்று கேட்க, அனைவரும் வெடித்துச் சிரிக்க ஆரம்பித்தனர்.
அதுவரை கோபத்தை அடக்கி வைத்திருந்த பாபு, மொட்டையை துரத்தித் துரத்தி அடிக்கத் தொடங்கினான். கரும்புச்சாறு விற்கும் கடையை சுற்றி ஒருவருக்கொருவர் துரத்திக் கொண்டு ஓட, அங்கு இருந்த கூட்டம் இவர்களை வேடிக்கை பார்க்கத்தொடங்கியது. ஓடிக்கொண்டிருந்த பாபுவை ஷங்கர் முதலில் பிடிக்க, மொட்டையை கிருஷ்ணா பிடித்தான். இருவரையும் சமாதானப் படுத்திவிட்டு, அனைவரும் தரையில் வட்டமாக அமர்ந்தனர்.
"டேய், எனக்கு குஷ்பூ அப்பளம் வேணும்" என்றான் மொட்டை.
"சரி, நான் வாங்கிட்டு வர்றேன்" என்று கிளம்பினான் கிருஷ்ணா.
"அப்படியே எனக்கு மிளகாய் பஜ்ஜியும் வாங்கிட்டு வா" என்றான் ஷங்கர். "சரி" என்று தலையை ஆட்டிவிட்டு சென்றான் கிருஷ்ணா. பாபு,ஓரளவிற்கு சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தான்.
"அந்த மேஜிக் பண்ணுறவன் மட்டும் என் கையில கிடைச்சா..... சங்கு ஊதிருவேன்" என்று கர்ஜித்தான்.
"சரி சரி, விடு" என்று சமாதானப் படுத்தினான் குமார்.
"டேய், நீ பேசாத. வேணும்னே சதி பண்ணியிருக்க நீ" என்றான் பாபு.
"சும்மா ஒரு ஜாலிக்கு தான் டா..." என்று குமார் சமாதானம் கூறுவதற்கும், கிருஷ்ணா பஜ்ஜி மற்றும் அப்பளத்துடன் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.
அனைவரும் கைவைத்த மாத்திரத்தில் பஜ்ஜி, அப்பளம் எல்லாம் கண நேரத்தில் காணாமல் போனது.
"உண்மையிலையே நீ பத்து ரூபாயைப் போட்டுட்டு என்ன வரணும்ன்னு நெனச்சிக்கிட்ட??" என்று மீண்டும் ஆரம்பித்தான் நட்டு.
"கிரீட்டிங் கார்டு" வரணும்ன்னு நெனச்சிக்கிட்டேன் என்று அவனுக்கு பதிலளித்து விட்டு, வேகமாக எழுந்தான்.
"டேய், அந்த ராட்டினத்துல ஒரு ரவுண்டு போகலாம்" என்றான் பாபு. ஷங்கரும் குமாரும் மட்டும் சம்மதிக்க, கிருஷ்ணா, மொட்டை மற்றும் நட்டு ஆகியோர் ராட்டினத்தில் ஏற விருப்பப்படவில்லை.
அவர்கள் மூவரும் ராட்டினத்தில் ஏற, இவர்கள் மூவரும் கடைகளை சுற்றிப் பார்க்கக் கிளம்பினர்.
காலகாலமாக எல்லா பொருட்காட்சிகளிலும் தென்படும் கடைகளான கம்ப்யூட்டர் ஜோசியம், மூணு 10 ரூபாய் பிளாஸ்டிக் சாமான்கள் கடை, கீ-செயினில் பெயரைப் பதிந்து கொடுக்கும் கடை, போஸ்டர்கள் விற்கும் கடை போன்றவற்றை ஒரு சுற்று சுற்றிவிட்டு கிருஷ்ணா, நட்டு மற்றும் மொட்டை ஆகியோர் மீண்டும் அந்த ராட்டினம் சுற்றும் இடத்திற்கே வந்து நின்றனர். அந்த நேரத்தில், அவர்கள் மூவரும் அந்த ராட்டினத்தில் சுற்றி முடித்துவிட்டு அருகில் இருந்த இன்னொரு ராட்டினத்தில் ஏறி விட்டிருந்தனர்.
அதையும் முடித்துக்கொண்டு மூவரும் இறங்கி வந்தவுடன்,
"டேய், நாகக்கன்னி பாக்கலாம் டா...." என்றான் மொட்டை.
"அதுல என்னடா இருக்கு" என்று ஷங்கர் அலுத்துக்கொண்டாலும், அனைவரும் டிக்கட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றனர்.
தரையில் ஆற்றுமணலை பரப்பி, அதன் மீது ஒரு சிறிய பெட்டியை வைத்திருந்தனர். அந்தப் பெட்டியின் மீது, ஒரு கன்னியின் தலை மட்டும் வெளியில் தெரிய, மீதி உடம்பு பாம்பின் உடம்பாக இருந்தது.
"இந்தப் பொண்ணு உட்கார்ந்திருக்கா, இல்ல படுத்திருக்கா?"
"ஒரு வேளை ஊனமா இருக்குமோ??"
"இல்ல... அது டீ குடிக்க வரும்போது நான் பாத்திருக்கேன். நல்லா நடக்குது"
இப்படி ஒவ்வொரு வருடம் பொருட்காட்சிக்கு வரும்போதும், அந்த வெறும் கன்னியை எப்படி 'நாகக்கன்னி' ஆக்கியிருப்பார்கள் என்று ஆராய்ந்து தோற்றுப்போவார்கள்.
கொஞ்சம் தூரத்தில் நின்று அந்த நாகக்கன்னியைப் பார்த்து ஏதாவது பேசி வம்பிழுப்பதில் அவர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.
"ஏய்... உன் வாலை ஆட்டு, பாக்கலாம்" என்றான் குமார்.
"என்ன முறைக்கிற?? மூஞ்சியிலேயே குத்துவேன்" என்று ஷங்கர் கையை ஓங்க,
"டேய், கொஞ்சம் சும்மா இருங்கடா... மானம் போகுது" என்று அவர்களை அடக்கினான் கிருஷ்ணா.
இவ்வளவு பேச்சுகளையும் வாங்கிக்கொண்டு, எந்தவித எதிர்ப்பும் காட்டாமல், ஒரு வார்த்தை கூட பேசாமல் சிவனே என்று அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த "நாகக்கன்னி"
அது முடிந்து வெளியில் வரவும் அவர்கள் கண்களில் தென்பட்டது, "பேய் வீடு"….
இதை மட்டும் விட்டுவைப்பானேன் என்று அதற்குள்ளும் செல்ல முடிவு செய்தனர். டிக்கெட்டை வாங்கிக்கொண்டு உள்ளே செல்ல, அங்கு காரிருள் சூழ்ந்திருந்தது. இருட்டில் மூழ்கியிருந்த அந்த இடத்தில் ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்றனர். பயத்தை போக்க, பாபு, கிருஷ்ணா, குமார் ஆகியோர் சத்தமாக பேசிக்கொண்டே வந்தனர். அந்த இருட்டில், திடீரென்று ஒரு மண்டை ஓட்டின் மேலே சிகப்பு விளக்கெரிய, நட்டு பயந்து "ஆ...." என்று அலறினான். சிறிது நேரத்தில் அந்த விளக்கு அணைந்து விட, அனைவரும் நட்டை கிண்டலடிக்கத் தொடங்கினார்.
மேலும் சில அடிகள் முன்னேறியவுடன், மூலையிலிருந்து ஒரு உருவம் திடீரென்று அவர்கள் முன் பாய்ந்து பயமுறுத்த, அனைவரும் பயத்தில் கூச்சலிட்டனர். நட்டு ஒரு படி மேலே சென்று, அவனுக்கு அருகில் வந்து கொண்டிருந்த பெண்ணை இறுக்கமாக கட்டிப்பிடித்து அலறத்தொடங்கினான்.
தொடரும்....
8 comments:
கௌரி,
உன்கிட்ட கேக்கணும்னு நெனச்சேன். இதுல உன் கேரக்டர் பேரு என்னடா?
I was continuously laughing while reading this episode da….This story will make everyone remember the happiest school days of their life…it’s for sure…
And I suggest publishing it twice a week…..Also description of exhibition (in towns like kumbakonam) is very gud da..
Great job Gowri………
krishna, சைரா பானுvudanum,
baabu, bravudanum, readers manadhil neengatha idam piditthu vittanar...
Indha listil, aduthathu nuttu thaan.
semma kujaalaga pogirathu...
adhu mattumindri,
Padhippin thalaippukku kaaranamum medhuvaga vizlangugirathu...
:P
u ppl njoyed well...those scool days..very nice..waitnign for next update
hey nalla poikitu iruku...inum konjam interestingaa eluthu.... ponnunga,
teachersa pathi.....
Dai...
Atlast story going with funny & interesting...!!
Now only ur getting in to real touch....keep going!!!
feel like visiting tat exhibition da.. may be we ll go sometime when u are here.. definetely engaging not borin a bit.
Post a Comment