'சேட்டை'ய ராஜாக்கள் - 5
Zoology வகுப்பை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தர்கள். சரியாக 45 நிமிடங்களில், முதல் வகுப்பின் மணி அடித்தது. அதையும் பொருட்படுத்தாமல், கணக்கை முடித்துக் கொண்டிருந்தார் வானதி டீச்சர்.
"டேய், போக சொல்லு டா... டார்ச்சர் தாங்க முடியல" என்றான் ஷங்கர்.
"இந்தாம்மா.... அதான் சொல்றான்ல... கிளம்பு" என்றான் பாபு.
கிருஷ்ணா, "டேய்... இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லேன் பாக்கலாம்" என்று வம்பிழுத்தான்.
மணி அடித்து ஐந்து நிமிடங்கள் ஆகியும், கணக்கு முடிந்தபாடில்லை. அடுத்த வகுப்பிற்காக, புதிதாக வந்திருந்த zoology ஆசிரியை வகுப்பிற்குள் நுழைந்தார்.
உள்ளே, கணக்கு ஆசிரியை இருப்பதைப் பார்த்து, அவசரமாக வெளியேறினார். அதை கவனித்த வானதி, "இரெண்டு நிமிடங்கள்" என்று சைகை காட்ட, அதை ஆமோதித்து வெளியில் காத்திருந்தார்
வெளியில் காத்திருந்த zoology ஆசிரியரை கவனித்து விட்ட கிருஷ்ணா, "டேய், வந்தாச்சு டா.." என்று கிட்டத்தட்ட கத்தினான்.
ஒரே சமையத்தில் ஷங்கர், பாபு, நட்டு, கிருஷ்ணா, பாலா அனைவரும் திரும்பிப்பார்த்தனர்.
"எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லைன்னாலும், தப்பு இல்ல" என்றான் பாபு.
ஷங்கர், "என்ன எதிர்பார்த்த நீ? ஐஸ்வர்யா ராய் வந்து கிளாஸ் எடுக்கும்னா??"
"அப்படி இல்ல..." என்று இழுத்தான் பாபு.
"டேய், நம்ம இருக்குறது கும்பகோணம். எதிர்பாக்குறதுக்கும் ஒரு அளவு இருக்கு. எப்படியோ, இந்த மிஸ் ஸ்ட்ரிக்டா இருக்க மாட்டாங்க. என்ஜாய் பண்ணலாம்"
"அது எப்படி ஸ்ட்ரிக்டா இருக்க மாட்டாங்கன்னு தீர்மானமா சொல்லற?" என்று ஆர்வமாகக் கேட்டான் கிருஷ்ணா.
'பொதுவா, அழகா இருக்குற டீச்சருங்க கண்டிப்போட இருக்க மாட்டாங்க. இது நான் பல வருஷமா ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்ச விஷயம்" . ஷங்கர் இப்படி சொல்ல, ஆர்வம் அதிகமானது.
உடனே, நட்டு இதற்க்கு முன் இருந்த கண்டிப்பான ஆசிரியர்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். ஏதோ பொறி தட்டியதும், "டேய், அப்போ நமக்கு போன வருஷம் இங்கிலீஷ் எடுத்த மிஸ் ஸ்ட்ரிக்டா இருந்தாங்களே?" என்று ஷங்கரிடம் கேட்டான்.
"அவங்க எல்லாம் உன் கண்ணுக்கு அழகியா தெரிஞ்சா நான் ஒண்ணும் பண்ண முடியாது" என்று பதிலளித்தான் ஷங்கர்.
"எல்லா கேள்விக்கும் ஒரு பதில் வெச்சிருப்பியே" என்று நட்டு சொல்லிக்கொண்டிருக்கும் போதே, கணக்கு ஆசிரியை வானதி வகுப்பை விட்டு வெளியேற, zoology ஆசிரியை உள்ளே நுழைந்தார்.
அனைவரும் எழுந்து நின்று "குட் மார்னிங்" கூறிவிட்டு நின்று கொண்டிருக்க, ஆசிரியர் உட்காரச் சொல்வதற்கு முன்னாலேயே ஷங்கர், கிருஷ்ணா, பாபு ஆகிய மூவர் மட்டும் அமர்ந்தனர். அவர்களைத் தவிர யாருமே அமராததால், உட்கார்ந்த வேகத்திலேயே மீண்டும் எழுந்து நின்றனர்.
வந்திருந்த ஆசிரியர் இதை கவனித்து விட்டாலும், பெரிதாக எதுவும் கண்டுகொள்ள வில்லை. அவர் அனைவரையும் உட்காரச் சொல்லிவிட்டு, தன்னை "ரூபி" என்று அறிமுகம் செய்து கொண்டார்.
வகுப்பில் இருக்கும் அத்தனை மாணவர்களையும் அறிமுகப்படுத்திக்கொள்ளுமாறு அவர் கூறியதும், முதல் பெஞ்ச்சில் அமர்ந்திருந்த பையன் முதலில் எழ, அவனை அமரச் சொல்லி விட்டு, கடைசி பெஞ்ச்சிலிருந்து ஆரம்பிக்குமாறு கூறினார்.
"நம்மள தான் கட்டம் கட்றாங்க...." என்று ஷங்கரின் காதோரம் கிசுகிசுத்தான் பாபு.
ஷங்கர், கிருஷ்ணா மற்றும் பாபு ஆகியோரின் முறை வரும்போது மட்டும், அவர் உன்னிப்பாக பெயர்களை கவனித்துக் கேட்டுக்கொண்ட மாதிரி உணர்ந்தனர்.
"இப்பவே நம்ம மேல ஒரு கண்ணு வெச்சிருப்பாங்க" என்றான் கிருஷ்ணா.
"விடு, இது என்ன நமக்கு புதுசா?" ஷங்கர் நக்கலாக சிரித்துக்கொண்டே கூறினான்.
அன்று முதல் நாள் என்பதால், பாடம் எதுவும் அவர் நடத்தவில்லை. ஃப்ரீ பீரியட் கிடைப்பது எவ்வளவு அரிது, அதுவும் பத்தாம் வகுப்பில் என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, வெட்டி அரட்டை அடித்தனர் அனைவரும்.
ஒவ்வொரு வகுப்பிற்கும் யார் ஆசிரியர் என்பது தெரிந்தது. மணிக்கு கடைசி வகுப்பின் மணி அடித்ததும், ஐந்து பெரும் வகுப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்..
பாலா, "டேய், நம்ம டீச்சருங்களை எல்லாம் சைட் அடிக்கிறோமே... இது தப்பில்லை?" என்றான்.
“என்ன திடீர் ஞானோதயம்?” பாலாவின் தலையில் தட்டினான் பாபு.
"நம்ம மேல தப்பு இல்ல. நம்ம ஸ்கூல் அப்படி. பொண்ணுங்கள கண்ணுலேயே காட்ட மாட்டேங்கிறாங்க... அதனால தான் இந்த சூழ்நிலைக்கு நம்ம தள்ளப்பட்டிருக்கோம்" விளக்கம் கொடுத்தான் கிருஷ்ணா.
"அதெல்லாம் சும்மா... உலகத்துல டீச்சரை சைட் அடிக்காத ஸ்டூடன்ட் இருக்கவே முடியாது" - அடித்துக் கூறினான் ஷங்கர்.
"சரி, அதை விடுங்க. டேய், இன்னிக்கி கம்ப்யூட்டர்ல கிரிக்கெட் ஆடலாம், வீட்டுக்கு வந்துரு . குமார் கிளம்பிட்டான். அவனுக்கு போன் பண்ணி வர சொல்லிடறேன்" என்று பாபுவிடம் கூறினான் ஷங்கர்.
கிருஷ்ணா, நட்டு, பாலா ஆகியோர் வீடுகள் தொலைவில் இருப்பதால் அடிக்கடி வர முடியாது. பாபு, குமார் மற்றும் ஷங்கர் ஆகியோரின் வீடுகள் மட்டும் அருகருகில் இருந்தன.
சிறிது நேரம் பேசிவிட்டு, கலைந்து சென்றனர்.
ஷங்கரும் பாபுவும் அருகில் இருக்கும் கையேந்தி பவனில் சாப்பிட்டு விட்டு, தாமதமாக வீட்டிற்கு சென்றனர்.
ஷங்கரின் வீடு -
வீட்டிற்குள் நுழைந்ததும் கிருஷ்ணாவின் அம்மாவிடமிருந்து மூன்று முறை ஃபோன் வந்ததாக ஷங்கரின் அம்மா கூறினார். கிருஷ்ணாவைப் பற்றி ஏதோ ஒரு விஷயம் கேட்கவேண்டும் என்று கூறியதாகவும் கூறினார்.
ஷங்கர், என்னவாக இருக்கும் என்று யோசிக்கத்தொடங்கினான்....
தொடரும்....
7 comments:
Memories of our school, class, teachers (Like Ruby) are moving in my mind as a picture, while reading this da…Also excepting our +1 and +2 settaigal, which will be more interesting and readers just keep waiting for that….
Dai ...
U r great story teller...
this is very funny...oru movi paatha effect....setaiya rajakal name ipa than poruthama iruku..po..
ula bayam ilaa than mathri yee act uda vendiyathu ;)(sat and got uop wehn new teacher came )...
nala katam katineega ..gud gang..
eager to rest of ur setaiys ;)
-abi
Those are the days which u'll never forget !!
எங்கள் பள்ளிகூடம்ல நைட் கிளாஸ் நடக்கும்.நைட் கிளாஸ் என்றால் கிளாஸ் முடித்து 6-10 வரை நடக்கும் ஒரு study hour.டீச்சர் வந்து attendance 9-10 eedupangaa.Ruby is from Hostel, so every thursday she used to come to take attendance and overlook us.During thursdays the attendance will be high...
எல்லாரும் ரூபி கிட்ட டவுட் கேப்பாங்க !! என்ன தவற at times she will be rude :D
zzology miss remba nallavanaga
aana Dinesh ku apo ellam veveram pathathu
avanuku konjam adhigama hype kuduthuradha
nut kum DInesh kum converastion irukura maadhiri pana innum interestinga irukum.. do tht in next episodes
hey jus now i read... unna andha situation nenachu paakumbothu really im
enjoying a lot....
unnapthi therinjikitu padichaathan inum nalla iruku.... vanathi teacher
velila poga sollu.. "indhaama athan paiyan solranla" semaya iruku...
aishwarya rai maathiri oru teacher... ne ella kezhvikum oru bathil
vechurupiye... ithuvum super....
:D
supera irukku.... tele serial ippo thaan real starting..ithil thaangal idamperavillaya??
konjam dialog formatla irundha padikka nalla irukkum pola thonukirathu....indha tamil booklalaam varumae...narrationlam bracketla potu, etc
just a suggestion... :D
enjoying it..
Post a Comment