'சேட்டை'ய ராஜாக்கள் - 6
என்ன விஷயமாக இருக்கும் என்று ஷங்கருக்கு பிடிபடவே இல்லை. ஃபோன் செய்வதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, குமார் அங்கு வந்தான்.
"வாடா.... நானே உனக்கு போன் பண்ணி கூப்பிடலாம்ன்னு இருந்தேன்"
"என்னடா விஷயம்... நான் சும்மா தான் வந்தேன்"
"இனிமே தான் என்ன விஷயம்னு தெரியும்"
"என்னடா சொல்ற?"
"கிருஷ்ணாவோட அம்மா ஃபோன் பண்ணியிருக்காங்க.... என்கிட்ட ஏதோ விசாரிக்கணும்னு சொல்லியிருக்காங்க"
"சமீப காலத்துல நம்ம ஒண்ணும் தப்பு பண்ணலையே...என்னவா இருக்கும்?"
"எனக்கும் தெரியல. அவன்கிட்ட ஃபோன் பண்ணி கேட்கலாம்னா, அவனுக்கு பதிலா அவங்க அம்மா எடுத்துட்டா என்ன பண்ணறதுன்னு யோசிக்கிறேன்"
"எதுக்கும் மொட்டைக்கும் நட்டுக்கும் ஃபோன் பண்ணி கேட்டுக்கோ. ஒருவேளை அவங்களுக்கு எதாவது தெரியுதான்னு பாக்கலாம்"
"கேட்கலாமே.... இந்தா, நீ கேளு. நான் வந்துடறேன்" போனை குமார் கையில் கொடுத்துவிட்டு உள்ளே சென்றான் ஷங்கர்.
ஷங்கர் திரும்பும்போது பாபுவும் அங்கு உட்கார்ந்திருந்தான்.
"நீ எப்போ டா வந்த??"
"இப்போ தான். என்னடா நடக்குது?? கிருஷ்ணாவோட அம்மா ஏதோ விசாரிக்கணும்னு சொன்னாங்களாமே?"
"ஆமாம் டா...என்னவா இருக்கும்ன்னு தெரியாம மண்டைய உடைச்சிக்கிட்டு இருக்கேன்"
"அவனுங்களுக்கு போன் பண்ணி கேட்டியா டா?" குமாரிடம் கேட்டான் ஷங்கர்.
"கேட்டேன் டா..... எவனுக்கும் ஒண்ணும் தெரியல"
"உச்....." என்று சலித்துக்கொண்டான் ஷங்கர்.
"சரி, நீ ஃபோன் பண்ணு. அவனே போன் எடுத்தா, அவன் அதிர்ஷ்டம். இல்லேன்னா, வேற வழி இல்லை.... அவங்க அம்மா கிட்ட பேசிடு"
குமார் இப்படி சொல்ல, அது தான் சரி என்று டயல் செய்தான் ஷங்கர்.
"ஹலோ ஆன்ட்டி... ஷங்கர் பேசுறேன். போன் பண்ணியிருந்தீங்கன்னு அம்மா சொன்னாங்க..."
போனின் மறுமுனையில்....
"ஆமாம்ப்பா... இவன் என்னைப் பாடு படுத்துறான்... ரெண்டு நாளுக்கு முன்னால வீட்ல ஒரே ரகளை"
"என்னாச்சு ஆன்ட்டி?"
"சாதாரணமாத்தான் பேசிக்கிட்டு இருந்தான். திடீர்ன்னு கல்யாணத்தைப் பத்தி பேச்சு வந்துச்சு... அப்போ, இவன் திடீர்ன்னு "என்னை மன்னிச்சிக்கங்கம்மா, நான் 'சைரா பானு'ன்னு ஒரு பொண்ணை லவ் பண்ணறேன்"ன்னு ஒரு குண்டை தூக்கிப் போட்டான்..."
"அப்படியா.....??" ஷங்கர் இப்படிக் கத்தியவுடன், குமாருக்கும் பாபுவிற்கும் ஆர்வம் அதிகமானது.
"ஆமாம்ப்பா.... எங்கேயோ டியூஷன் போகும் போது பாத்தானாம். அப்போவே லவ் பண்ண ஆரம்பிச்சிடானாம்.... அவ ரொம்ப நல்ல பொண்ணு, அப்படி இப்படின்னு பேசுறான். உனக்கு தெரியுமாப்பா??"
"அப்படி எல்லாம் எனக்குத்தெரிஞ்சு எதுவும் இல்லையே ஆன்ட்டி..."
"இல்லப்பா.... அந்த பொண்ணைப்பத்தி தப்பா பேசுனா நான் பொறுத்துக்க மாட்டேன்னு சொல்லி, தட்டை எல்லாம் வீசி அடிக்கிறான்."
"................"
"நீங்களே பாத்திருந்தா கூட, இவ்வளவு நல்ல பொண்ணைப் பாத்திருக்க முடியாதுன்னு சொல்லறான்"
"..............."
"நான் அவளை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லறான்.... ஒரு அம்மா கிட்ட பேசுற பேச்சாப்பா இது?"
"நான் விசாரிக்கிறேன் ஆன்ட்டி.... அப்படி எல்லாம் எங்களுக்கு தெரியாம அவன் பண்ண மாட்டான்"
"அதனால தான் உனக்கு ஃபோன் பண்ணினேன். ரெண்டு நாளா தவிச்சிக்கிட்டு இருந்தேன். இப்போ அவன் சித்தி வீட்டுக்குப் போயிருக்கான். அதனால தான் பேச முடிஞ்சது"
"நீங்க பயப்படாதீங்க ஆன்ட்டி..... நான் கேட்டுப் பாக்குறேன்"
"கொஞ்சம் விசாரிச்சிப் பாருப்பா.... ஆனா, நான் சொன்னேன்னு மட்டும் சொல்லிடாதே... அவ்வளவு தான் அப்புறம்"
'சரி ஆன்ட்டி... நான் கேட்டுட்டு சொல்லறேன். ஆனா, நீங்க பயப்படற மாதிரி ஒண்ணும் இருக்காது"
"இல்லப்பா.... அவன் ரொம்ப சீரியஸா பேசுறான்... சாப்பாடு தட்டை விசிறி அடிக்கிறான்னா பாத்துக்கோ"
"சரி ஆன்ட்டி.... நான் பாத்துக்குறேன்"
"சரிப்பா..... எனக்கு நீ ஃபோன் பண்ணி சொல்லறவரைக்கும் நிம்மதியாவே இருக்காது"
ஷங்கர் போனை வைத்துவிட்டு பெருமூச்சு விட்டான்.
"என்னடா...சீக்கிரமா சொல்லு" என்று பாபுவும் குமாரும் ஷங்கரை துளைத்து எடுத்தனர்.
ஒரே மூச்சில் அந்த தொலைபேசி உரையாடல் முழுவதையும் சொல்லி முடித்தான். சொன்னவுடன், குமாரும் பாபுவும் சிரிக்கத் தொடங்கினர்.
குமார் : "வாய்ப்பே இல்லை.... சும்மா சொல்லறான்"
ஷங்கர் : "எனக்கும் அப்படி தான் தோணுது. ஆனா, தட்டை எல்லாம் தூக்கி எறிஞ்சிருக்கான்... ஓவரா சீன் போட்டிருக்கானே..."
பாபு : "டேய், அவன் லவ் பண்ணறான்னு சொன்னா, எவன் டா நம்புவான்?"
ஷங்கர் : "இதை எப்படியாவது தெளிவு படுத்திக்கணும்"
குமார் : "நேரடியா கேட்க வேண்டியதுதான்"
பாபு : "அவனை இங்க வர சொல்லு...."
குமார் : "இவ்வளவு தூரம் இனிமே அவன் வரமாட்டான். நட்டு வீட்டுக்கு வேணும்னா வரசொல்லலாம்"
பாபு : "சரி, நட்டுக்கு போன் பண்ணி சொல்லிடு... நம்ம அங்க போகலாம்"
ஷங்கர் : "ஆமா.... ஒரு அவசர கூட்டத்தை கூட்டிட வேண்டியது தான். மொட்டைக்கும் சொல்லிடறேன். எல்லாரும் வந்துரட்டும்"
குமார் : "கிருஷ்ணாவை எப்படி வர சொல்லறது?? அவன் சித்தி வீட்டு போன் நம்பர் இருக்கா உன்கிட்ட?"
ஷங்கர் : "இருக்கு... அவனை கடைசியா வர சொல்லலாம். அவன் உடனே அங்கே வர வேண்டாம்"
பாபு : "ஏன் டா?"
ஷங்கர் : "அவன் வர்றதுக்குள்ள நம்ம எல்லாரும் பேசி வெச்சிக்கலாம்"
வீட்டிற்கு வருவதாக 'நட்டு' க்குத் தகவல் சொல்லிவிட்டு, மூவரும் கிளம்பிச் சென்றனர்.
அங்கே - மூவரும் வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு, உள்ளே சென்றனர். உள்ளே சென்ற மூவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது! வராண்டாவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா!
சுதாரித்துக் கொண்ட ஷங்கர், "நட்டு எங்க டா? நீ எப்போ வந்தே?" என்றான்.
கிருஷ்ணா, "இப்போ தான் டா வந்தேன். நட்டு பக்கத்துல கடைக்கு போயிருக்கான். ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நானே உங்களை எல்லாம் வர சொல்லலாம்ன்னு இருந்தேன். நீங்க எல்லாரும் வரீங்கன்னு நட்டு சொன்னான். மொட்டைக்கும் போன் பண்ணி வர சொல்லிருக்கேன். அவன் வந்துரட்டும். சொல்லறேன்..." என்றான்.
தொடரும்....
9 comments:
dei
nan padichithilaye this is the interesting one in this series..:)
அப்படியா.....??"அப்படியா.....??"அப்படியா.....??" this s most interesting sequence n this episode....:):)
I guess what happen next...but will tell u once after complete ur next episode....
dei machan katha poka poka romba thrilling ka pokuthu da
oru episode mudichathum athutha episode pathika avaloda irukku
ne onnu mattum sollu innu ethana episode eluthalanu irukka
Tamilai pass aavatharkkuthaan padippaen...40 mark mela oru markukkum strain panna maataen.
Appadi irukkum ennai ippodhu pozludhu pokkukum tamilai padikka vaithathu,veithukkondum irukkirathu indha "Saetaiya Rajakkal". Aduttha padhippai aezluthukkooti padikka naan thayaar..
Aaarvam thaangal meethi kadhaya sollu pa...
Dai
I think this episode is for adding expectations to the upcoming episodes…
The conversation in this seems to be real (how school frnds used to chat)
Gud….U have completed six episodes interestingly….
enna gowri, romba interestinga krish soliduvaanu paatha ipadi mudichitaa...
Dae story padam da....
As bala said dineshku ivalo build up theviyae illa da.. Sema palathuku periya rowdi effect over...
Great Going....
dei andha sairabanu matter marandhey pochu da
ipo nenachu nenachu sirichen..
Dinesh ku comedian role nalla varum..
so avanai full time comedy ku use panikalam
so build up irukattum
(avan bayangaramanavan dhaan aana kuzhanthaingaluku kedayadhu.. indha maadhiri :p)
Next episode entha maadhiri podra.. epo podra..
Post a Comment