Monday, June 16, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 7

அனைவரும் நட்டிற்காகவும் மொட்டைக்காகவும் காத்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் நட்டு அங்கு வந்து சேர்ந்தான்.

பாபு, கிருஷ்ணாவிடம், "என்ன விஷயம், சொல்லு" என்றான்.

"இரு டா, மொட்டை வந்துரட்டும். அப்புறம் ஒவ்வொருத்தனுக்கும் தனித்தனியா சொல்லிக்கிட்டு இருக்கணும்"

"அவன் சொன்ன நேரத்துக்கு என்னைக்கு வந்திருக்கான்? எத்தனை மணிக்கு டா வரேன்னு சொல்லிருக்கான்?" என்று நட்ராஜிடம் கேட்டான்.

"5.30க்கு வரேன்னு சொன்னான்" என்றான்.

"அப்படின்னா, 6.30க்கு மேல தான் வருவான். டேய், நம்ம ஊர்ல பொருட்காட்சி வந்திருக்கு, சீக்கிரமா கிளம்பினா போகலாம்."

"அந்த நாய்க்கு ஒரு போனைப் போடு டா" என்றான் ஷங்கர்.

வரிசையாக ஒவ்வொருவரும் வசை பாட ஆரம்பிக்கும்போது, "திட்ட ஆரம்பிச்சிருப்பீங்களே...." என்று சொல்லிக்கொண்டே சரியாக அங்கு வந்து நின்றான் மொட்டை.

அவன் வந்ததும், கிருஷ்ணா எழுந்து சென்று, அந்த ரூமின் கதவை அடைத்தான். அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கிருஷ்ணாவைப் பார்க்க, அவன் நடுவில் வந்து அமர்ந்து கொண்டு,

"நான் ஒரு பொண்ணை லவ் பண்ணறேன், பேரு சைரா பானு" என்று சொல்லிவிட்டு, அனைவரையும் உற்றுப் பார்த்தான்.

நட்டும் மொட்டையும் ஏதோ ஜோக் சொன்னது போல, விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர். குமார், பாபு மற்றும் ஷங்கர் மட்டும் அமைதியாக இருந்தது கிருஷ்ணாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களை நோக்கி, "என்னடா நீங்க மட்டும் ரியாக்ஷனே காட்டாம இருக்கீங்க?" என்றான்.

"உங்க அம்மா சொன்னாங்க" என்று பதிலளித்தான் ஷங்கர். ஷங்கர் இப்படி கூறியதைக் கேட்டு திடுக்கிட்ட கிருஷ்ணா, "எப்போ சொன்னாங்க, என்ன சொன்னாங்க?" என்றான். நட்டும் மொட்டையும் சிரிப்பதை நிறுத்திவிட்டு, ஷங்கரை கேள்விக்குறியோடு பார்த்தனர்.

"நீ முதல்ல சொல்லு" என்றான் ஷங்கர்.

"பொண்ணு பேரு சைரா பானு. கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா, அவளை தான் பண்ணிப்பேன்" . அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு, "அப்படின்னு எங்க அம்மாகிட்ட கதை விட்டிருக்கேன்" என்று முடித்தான்.

"அதானே பாத்தேன். நம்ம கதையில சீரியஸ் எபிசோட் வர வாய்ப்பே இல்லையேன்னு நெனச்சேன். சரியா போச்சு." என்றான் பாபு.

ஷங்கர், "எதுக்கு டா இப்படி கதை விட்ட? உங்க அம்மா ரொம்ப ஃபீல் பண்ணறாங்க. எனக்கு போன் பண்ணியிருந்தாங்க...."

"அட்வைஸ் பண்ணறேன்னு சொல்லி டார்ச்சர் போட்டாங்க டா. என்னமோ நம்ம ஸ்கூல்ல எங்க பாத்தாலும் ஃபிகருங்க இருக்குற மாதிரியும், நாம என்னமோ அதுங்க பின்னாடியே சுத்துற மாதிரியும் ஓவரா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஏற்கெனவே நம்ம எல்லாரும் காய்ஞ்சி போயிருக்கோம்... வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுன மாதிரி இப்படி அட்வைஸ் பண்ணதும் ரொம்ப கடுப்பாயிட்டேன். அதனால தான் இப்படி ஒரு பிட்டைப் போட்டேன்" என்று அவன் கற்பனைக் காதல் கதையைப் பற்றி சொல்லி முடித்தான்.

"அதெல்லாம் இருக்கட்டும், அது என்ன சைரா பானு?"

"அதுவா... திடீர்னு என்ன பேரு சொல்றதுன்னு தெரியல. அப்போ டிவியில "பம்பாய்" படம் ஓடிக்கிட்டு இருந்தது. அதுல மனிஷா கொய்ராலா பேரு சைரா பானு, டக்குன்னு அந்த பெயரையே என் லவ்வருக்கும் வெச்சிட்டேன்"

"தட்டை எல்லாம் விசிறியடிசிருக்க?"

"அது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் ஆகிப்போச்சு...."

"இதெல்லாம் எதுக்கு?"

"டேய், நம்மள மாதிரி நல்ல பசங்களோட அருமை இவங்களுக்கு புரியணும்னா, இப்படி எதாச்சும் அதிர்ச்சி வைத்தியம் பண்ணனும். கொஞ்ச நாளைக்கு இப்படி பில்ட்-அப் கொடுத்துட்டு, அப்புறம் இல்லைன்னு சொல்லிடலாம். எங்க அம்மா உங்க யாரகிட்ட இதைப்பத்தி கேட்டாலும், ஆமாம்ன்னு சொல்லுங்க."

"அதெல்லாம் முடியாது. நான் உண்மையை சொல்லிடுவேன்" என்றான் ஷங்கர்.

"நீ அப்படியே சொல்லு, ஆனாலும் எங்க அம்மாக்கு அந்த பயம் இருந்துகிட்டே தான் இருக்கும்... என்னைத் தவிர யார் சொன்னாலும் அவங்க சந்தேகம் முழுசா தீராது"

"அட தூ..." என்று அனைவரும் துப்பினார்கள்.

"டேய், அப்போவே நான் சொன்னேனே? சும்மா சப்பை மேட்டரா இருக்கும்ன்னு. கிளம்புங்கடா, அட்லீஸ்ட் எக்ஸிபிஷனுக்குப் போகலாம்" அனைவரையும் அவசரப் படுத்தினான் பாபு.

"இப்படி எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு மொக்கை போட்டதுக்கு, நீ தான் எல்லாருக்கும் மிளகாய் பஜ்ஜியும், குஷ்பு அப்பளமும் வாங்கித் தரனும்" என்றான் பாலா.

"வாங்கித்தரேன். அதுக்கு தானே நீ வர்ற...."

பொருட்காட்சிக்குள் நுழைந்தார்கள். டவுன் ஹை ஸ்கூல் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது அந்த பொருட்காட்சி. சினிமா தவிர வேறு பொழுதுபோக்கு ஏதுமில்லாத ஊரில், இப்படி பொருட்காட்சி நடைபெற்றால், திருவிழாக் கூட்டமாக இருக்கும்.

"ஐயோ... என் பர்ஸை மறந்து வெச்சிட்டு வந்துட்டேன்" என்றான் நட்டு.

"கூட்டத்தை வேடிக்கைப் பாத்துக்கிட்டே, எங்களை மறந்துட்டு எங்கேயும் போயிடாத, அது போதும்" என்றான் கிருஷ்ணா.

"செம கூட்டம், ஊர்ல இருக்குற அத்தனை பிகரும் வெளியில வர்ற ஒரே சமையம் இது தான்..." என்றான் குமார். அனைவரும் அதை ஆமோதித்தனர்.

அவன் இந்த பொருட்காட்சிக்கு வருவது இரெண்டாவது முறை. அவன் ஏற்கெனவே ஒரு முறை வந்திருந்து அனைத்தையும் பார்த்துவிட்டிருந்தாலும், அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் "மேஜிக் ஷோ"வில் பாபுவை பங்கு பெறச் செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டியிருந்தன். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஷங்கரிடம் அதைப் பற்றி முதலிலேயே கூறியிருந்தான். அதன்படி, நேராக "மேஜிக் ஷோ"விற்குள் நுழைந்தார்கள்.

மேஜிக் செய்பவர் ஒவ்வொரு வித்தைகளையும் செய்து காட்டும் போது கை தட்டல் காதைக் கிழித்தது. அப்போது, மெதுவாக பாபுவிடம் குமார் "அடுத்த மேஜிக் செய்யும் போது, பார்வையாளர்கள் யாரையாவது கூப்பிடுவார். அதுக்கு நீ போ" என்றான்.

"ஏன் டா?" என்று கேட்டான் பாபு.

"ஒரு பையில பத்து ரூபாயைப் போட்டு, நீ மனசுல என்ன நெனச்சிக்கிட்டாலும் அதை எடுத்துக் கொடுக்கிறார். நேத்து கூட ஒரு சின்னப் பையன் கைக்குட்டை வேணும்ன்னு நெனச்சிக்கிட்டான்... சரியா எடுத்துக் கொடுத்தார் டா... நீ அவரால எடுத்துக் கொடுக்க முடியாததா நெனச்சிக்கோ" என்றான் குமார்.

குமார் சொன்னதில் ஆர்வமான பாபு, என்ன பொருளை நினைத்துக் கொள்வது என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான். அதற்குள், அந்த மேஜிக் கலை நிபுணர், பார்வையாளர்களில் இருந்து யாரையாவது அழைக்க, பாபு அவசர அவசரமாக கையைத் தூக்கினான். அதிர்ஷ்ட்டவசமாக, பல பேர் கையைத்தூக்கிய போதும், பாபுவை தேர்ந்தெடுத்தார் அவர். குஷியான பாபு, மேடை மீது ஏறி நின்றான்.

குமார் சொன்ன மாதிரியே ஒரு பையைக் காட்டி, அதற்குள் பத்து ரூபாயை போடச் சொன்னார். பின்பு, பத்து ரூபாய் பெருமானமுள்ள ஏதேனும் ஒரு பொருளை நினைத்துக் கொண்டு, கண்ணை மூடி, அந்த பைக்குள் கையை விடச் சொன்னார்.

பாபுவும் அவர் சொன்னபடி, கண்ணை மூடி அந்த பைக்குள் கையைவிட்டான். அந்த மேஜிக் நிபுணர் ஏதோ மந்திரத்தை சொல்லி, "இப்போ நீ நினைத்த பொருள் பைக்குள் வந்தாச்சு. மெதுவா அதை வெளியில் எடு" என்றார்.

கூடிருந்த கூட்டம் மொத்தமும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, பாபு அதை மெல்ல வெளியில் எடுத்தான்...

தொடரும்......

8 comments:

Anonymous said...

I think u could have described the exhibition scenario atleast in one Para….Expecting that in next episode…And except that, I like to confess the readers whatever described in this episode is 100% true….And I appreciate Gowri for bringing back those enjoyable days in my eyes after 8 or 9 years….and I enjoy reading each and every episode…Gud work….

Vignesh Page said...

So..Ur qualified to take a tamil mega serial too :)

Bala said...

hmm.. dei school time la naan dhaan da first irupaen... ipo dhaan konjam latea varen.. right vidu... Thirumba epo indha maadhiri onna sendhu kumbakona tha sutha porom nu ... orey d feeelings.. :(

Anonymous said...

I couldnt stop laughing.. Great!!.
Dinesh is great

PS:indeed krishna is a great comedy king of the class!! LOve to be with him, you'll laugh always

Rakul005 said...

The quick revelation of the previous episodes' mystery and the graceful movement on to the nxt matter is a grt work,was enjoyable to read.As i dont know the characters the names were a bit ignored in the begining, as relating to them was difficult....however krishnavai manasula niruthuramathiri oru negalchiyaiyum, tharpothu kumar and babuvai veithum oru incidentai konduvandhu readers manasula oru oru kadhapaathiratthaiyum patchai kutthi kondu poogirar gowri. :P


athalaam irukkatum aamam andha paiyula enna irundhuchu?!!! :D

Ganesh Janarthanan said...

gowri ur the most eligible person to become a writer after sujatha

Ganesh Janarthanan said...

let me know still how many episodes are pending in settaya rajakal.............

Anonymous said...

romba serious a wait pana finally cha..chumama kata vita krishna va ena sola....thn magic show..i was eargly watining to knw ,wt tht magician goin to take,but..as usual :( thodarum..

-abi