Monday, July 14, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 11

இந்த ஆளை எங்கேயோ பாத்திருக்கேனே..." என்று முணுமுணுத்தான் ஷங்கர். ஏதோ பொறி தட்ட, சிறிது தூரத்தில் நின்று கொண்டிருந்த குமாரை அழைத்தான். குமாரிடம், "இந்த ஆளு யாருன்னு தெரியுதா??" என்றான்.

அவரைப் பார்த்துவிட்டு "இது சேகர் டா... எங்க மாமா மாமாவோட ஃபிரெண்டு" என்றான் குமார்.

"கரெக்ட். இப்போ தான் ஞாபகம் வருது. உங்க மாமாகூட இவர நம்ம பாத்திருக்கோம். சரி, நான் சொல்லற மாதிரி செய். நேரா நீ அந்த ஆள் கிட்ட போய், “சேகர் அண்ணா, எப்படி இருக்கீங்கன்னு கேளு..."

"டேய், அவருக்கு என்னைத் தெரியாது டா.... நான் தான் அவரைப் பாத்திருக்கேன்...."

"தெரியும்.... அந்த ஆள் பேரு சேகர் தானே??"

"ஆமா...."

"அப்போ நேரா போ. நான் சொன்ன மாதிரி செய். மத்ததை எல்லாம் நான் பாத்துக்குறேன்...."

பயத்தில் நின்று கொண்டிருந்த நட்டையும் அழைத்தான் ஷங்கர்.

"நீயும் என்கூட வா...." என்றான்.

"டேய், என்னை ஏன்டா எக்கச்சக்கமா மாட்டிவிட்ற? நீயே போய் சைக்கிளை எடுத்துட்டு வா.... அவனுங்க என்னைப் பார்த்தா, மறுபடியும் பிரச்சனை பண்ணுவாங்க" என்றான்.

"நான் பாத்துக்குறேன். நீ வா" என்று அவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான் ஷங்கர்.

ஷங்கர் சொன்னபடி குமார் நேராக அங்கு சென்று "சேகர் அண்ணே... எப்படி இருக்கீங்க?" என்று கேட்டான். இதைக்கேட்ட அவர், குமாரை கேள்விக்குறியோடு பார்க்க, உடனே குமார், "என்னண்ணே மறந்துட்டீங்க.... எங்க மாமா கூட அன்னைக்கு ஹோட்டல்ல பாத்தீங்களே..." என்றான்.

"யாரு உங்க மாமா...?" என்று அவர் குழப்பத்துடன் கேட்க, குமார் அவன் மாமாவின் பெயரைக் கூறினான். உடனே அவரும் "ஆமா, ஆமா..... அவன் அக்கா பையனா நீ??" என்றார். பிறகு, ஷங்கரையும் நட்டையும் தன் நண்பர்கள் என்று அறிமுகப் படுத்தினான்.

"நேத்து இவனோட சைக்கிளை இங்கேயே விட்டுட்டு வந்துட்டான், அதான் எடுத்துட்டுப் போகலாம்ன்னு...."

நட்டைப் பார்த்ததும், "நேத்து... " என்று ஏதோ சொல்லவந்தவர், அதை பாதியிலேயே நிறுத்திவிட்டு, “இவன் சைக்கிள் தானா? என்று கேட்டுவிட்டு, "அங்கே நிக்கிறதுல எது உன்னோடதுன்னு பாத்து எடுத்துக்க...." என்றார்...

நட்டு சைக்கிளை எடுத்தபின், அனைவரும் சேகரிடம் விடைபெற்றுக் கொண்டு வந்தனர்.

"இந்த சீன்ல நான் எதுக்கு? சைக்கிளை நீயே எடுத்துட்டு வந்திருக்கலாம்" என்று ஷங்கரிடம் சொன்னான் நட்டு.

"நேத்து உன்கிட்ட பிரச்சனை பண்ணது சேகர் கிட்ட வேலை செய்ற பசங்க. சேகரை நமக்குத் தெரிஞ்சவரா காட்டிக்கிட்டா, இனிமே இவனுங்களால எப்போவுமே பிரச்சனை வராது" என்றான் ஷங்கர்.

சைக்கிள் கிடைத்த சந்தோஷத்தில் நட்டு உற்சாகமாக நடக்க, இதை கவனித்த கிருஷ்ணா, "நட்டு, சைக்கிள் கிடைச்சாச்சு.... இதுக்கு ஒரு ட்ரீட் நீ வெச்சே ஆகணும். இல்லேன்னா, அது உன் சைக்கிளுக்கு பெரிய அவமானம்" என்றான்.

"அது என்னடா சைக்கிளுக்கு....? அவனுக்கு அவமானம்ன்னு சொல்ல மாட்டியா?" என்றான் பாலா.

"அவனுக்கு தான் மானம், ரோஷம் எல்லாம் கிடையாதே" என்றான் கிருஷ்ணா.

"ஆமா... அதான் நம்ம கூட சேர்ந்துட்டான்ல....." என்றான் குமார்.

"ஓவரா பேசாத...." - வழக்கமான பதில் வந்தது நட்டிடமிருந்து.

"ட்ரீட்டா... ச்ச... தெரிஞ்சிருந்தா மதியானம் எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டேனே.." என்றான் பாபு.

நட்டைக் கேட்காமல் அனைவரும் முடிவே செய்துவிட, வேறு வழியின்றி நட்டு தலையாட்டினான்.

வழக்கமாக செல்லும் "சோழா பாஸ்ட் புட்" கடைக்கு சென்றனர், ஃபிரைடு ரைஸ், காலிஃபிளவர் மஞ்சுரியன் எல்லாம் ஆர்டர் செய்துவிட்டு, அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.

"அந்த பொண்ணுக்கு தான் டா தேங்க்ஸ் சொல்லணும். இல்லேன்னா, நமக்கு ட்ரீட்டே கெடச்சிருக்காது" என்றான் பாலா..

"டேய், ஞாயமா அந்த பொண்ணை கட்டிப்புடிச்சதுக்கு ஒரு ட்ரீட், சைக்கிள் கெடச்சதுக்கு ஒரு ட்ரீட்ன்னு ரெண்டு ட்ரீட் நீ குடுக்கணும்..." என்றான் பாபு.

"இருந்தாலும், அந்த சப்பை ஃபிகரை நீ கட்டிப்புடிச்சிருக்க வேண்டாம்...." என்றான் பாலா.

பாலா நட்டை இஷ்டத்துக்கு கிண்டலடித்துக் கொண்டிருக்க, பாபு குறுக்கிட்டான்.

"டேய் மொட்டை.... நிறுத்துடா. நீ என்னமோ ரொம்ப ஒழுங்கு மாதிரி அவனை ஓட்டிக்கிட்டு இருக்க... நீ பண்ண மேட்டேர சொல்லிருவேன்" என்றான்.

"டேய்... நமக்குள்ள டீல்..." என்றான் மொட்டை.

என்ன விஷயம் என்று அனைவரும் பாபுவை துளைத்தெடுக்க, அவன் சொல்லத்துவங்கினான்....

"நேத்து எங்க வீட்டு மொட்டைமாடியில நின்னுக்கிட்டு பக்கத்து வீட்டு ஆன்ட்டி குளிக்கும்போது எட்டிப்பாத்திருக்கான்.... அந்த ஆன்ட்டி இவனை கன்னபின்னான்னு திட்ட ஆரம்பிச்சு.. ஒரே ரகளை..."

"அப்புறம்?"

"அப்புறம் என்ன, ரெண்டு பெரும் அங்கே இருந்து எகிறிட்டோம். இனிமே எங்க வீட்டு மொட்டை மாடிக்கே போக முடியாத மாதிரி பண்ணிட்டான் டா இவன்"

அனைவரும் நட்டை விட்டுவிட்டு, மொட்டையை கலாய்க்கத் தொடங்கினர். தன் இடத்தை மொட்டை பிடித்துக்கொண்டதால், நிம்மதியடைந்தான் நட்டு.

"டேய், அந்த ஆன்ட்டி அங்க குளிச்சிக்கிட்டிருக்கும்னு எனக்கு எப்படி டா தெரியும்? நான் எதார்த்தமா எட்டிப் பார்த்தேன்..." என்றான் மொட்டை.

"எதார்த்தமாவது, பதார்த்தமாவது.... இவ்வளவு நடந்திருக்கு..... டேய், இதுக்கு ஒரு ட்ரீட் வேணும் டா..." என்றான் ஷங்கர்.

ஒரு வழியாக சாப்பிட்டு முடிந்தவுடன், அனைவரும் அவரவர் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமானார்கள்.

"டேய், half-yearly பரீட்சை வருது... ஏதாச்சும் படிப்போம்..... " என்றான் கிருஷ்ணா.

"இப்போ தான் மிட்-டெர்ம் முடிஞ்சது, அதுக்குள்ள இது வேற..." என்றான் பாபு.

"சரி டா, நாளைக்கு பார்க்கலாம்"

அனைவரும் கலைந்து சென்றனர்.

மறுநாள் காலை....
பிரேயர் மணி அடிக்கும் வரை குமார் வரவில்லை. கடைசி நிமிடம் வரை பார்த்துவிட்டு, அனைவரும் பிரேயருக்கு சென்றனர். அனைத்து வகுப்பு மாணவர்களும் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். பாபுவும் ஷங்கரும் வரிசையில் கடைசியாக நின்றனர்.

"ஏன் டா அவன் வரல?" என்று ஷங்கரிடம் கேட்டான் பாபு.

"தெரியலையே. வரலேன்னா ஃபோன் பண்ணி சொல்லியிருப்பானே...." என்றான் ஷங்கர்.

பிரேயர் ஆரம்பித்தது. ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களின் பின்னால் நின்றுகொண்டுருக்க, வேகமாக ஓடி வந்துகொண்டிருந்தான் குமார். அவனும் ஷங்கரின் பின்னால் வரிசையில் நிற்க முயல, அவனை தடுத்தார் பி.டி வாத்தியார். தாமதமாக வந்ததால், பிரேயரில் கலந்து கொள்ள முடியாது என்று அவனை தடுக்க, அவன் தாமதமாக வந்த காரணத்தைக் கூறினான். அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத அவர், அவன் கையைப் பிடித்து இழுத்தார். குமார், அவர் பிடியிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள முயன்ற போது தடுமாறி வாத்தியார் கீழே விழுந்தார்.

அங்கிருந்த அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சியில் அப்படியே நின்றனர்.

தொடரும்....

5 comments:

Ganesh Janarthanan said...

dei unnoda kussumbukku alavellamapoidichi
those who are reading these episodes,as their stomach will starts paining(continuous laughing)
ha ha ha ha ha ha

Bala said...

dei machi..
satyama solraen da..
andha aunty kulikuradhu enaku theriyadhu da.. enna panradhu aana naan edhuvumey paakala da..
idhu dhaan unmai ..
(dei soba solla maaten solla maatenu potu kuduthuteeya..
inimael un mater ellam solraen da deiii.. )

Anonymous said...

Dae bala,

Nee edhuvame paakadanalla thaan andha aunthy onna adika vandaangala....


Nee enna pathi enna solla pora...
en valkai oru thirnada puthagam, so no hidden facts..




Kadha vudadha da..

Bala said...

apdeengala sir

andha thirandha puthakathula ethanai varthai adichi adichi eluthirupan adhai ellam rubber vachi erase panni indha ulagathuku kaamikuren paaruda..

lol

Ganesh Janarthanan said...

dei bala unna eppadida namburathu