Monday, May 05, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 1


ஒரு வழியாக, தலைப்பு முடிவாகிவிட்டது. 'சந்திரமுகி'யை கலக்கியது 'வேட்டைய'ராஜா, எங்கள் பள்ளியை கலக்கியது 'சேட்டைய' ராஜாக்கள். இது எப்படி இருக்கு??? ச்சும்மா ஒரு பஞ்ச் டயலாக் முயற்சி செய்து பார்த்தேன். சொதப்பி விட்டது... ஹி ஹி

பி.கு. இக்கதையில் வரும் கேரக்டர்களின் நிஜப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இத்தொடரின் மூலம் யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.
நல்லதை மட்டும் எடுத்துக்கங்க, கெட்டதை விட்டுடுங்க...

கிறிஸ்து ராஜா மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் - இங்கு தான் நாங்கள் படித்தோம் என்று சொல்வதை விட,இது தான் நாங்கள் துள்ளித் திரிந்த இடம் என்று சொல்லலாம். எங்கள் ஊரிலேயே கண்டிப்பான பள்ளி என்று பெயர் பெற்றிருந்தது. கண்டிப்பான விதிமுறைகள் நிறைய உண்டு.
எங்கள் பள்ளியை 'ஜெயில்' என்று சக மாணவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரையும் அப்படித்தான். ஆனால், அது விதிமுறைகளை மதித்தவர்களுக்கு. எங்களுக்கு அல்ல.

சாலையின் இரு புறமும் அமைந்திருக்கும் கட்டிடங்களில் ஒன்றாம் வகுப்பு முதல், பன்னிரெண்டாம் வகுப்பு வரை இருக்கும் வகுப்புகளும், அதே சாலையில் கொஞ்சம் தள்ளியிருக்கும் மற்றுமொரு சிறிய கட்டிடத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி போன்ற வகுப்புகளும் நடைபெறும்.

எங்கள் பள்ளியில் வினோதமான விஷயங்கள் நிறைய உண்டு. கோ-எஜுகேஷன் என்று சொல்லுவார்கள். ஆனால் மாணவர்களையும் மாணவிகளையும் தனித்தனி வகுப்புகளில் அமர்த்துவார்கள். இவ்வளவு ஏன்? காலை பிரேயர் கூட தனித்தனியாகத் தான் நடக்கும். எங்கள் ஊர் பள்ளிகளிலேயே எங்கள் பள்ளியில் தான் “ஸ்போக்கன் இங்கிலீஷ்” உண்டு என்று மார்தட்டுவார்கள். ஆனால், அந்த இங்கிலீஷைக் கேட்டால், காதில் இரத்தமே வந்து விடும். இதில் கொடுமை என்னவென்றால், அங்கு இருந்த ஆசிரியர்களில் முக்கால் வாசி பேருக்கு ஆங்கிலம் பேசவே வராது. உதாரணத்துக்கு, "நாளைக்கு வருவியா?" என்று கேட்பதற்கு, "டுமாரோ யூ கம்மிங்கா?" என்று கேட்டு நம்மை வாயடைக்க வைத்துவிடுவார்கள். சிலசமயங்களில் ஆயா கூட, அந்த ஓட்டை ஆங்கிலத்தில் பேசி "ஆப்பு" அடிப்பார். முட்டிக்கொள்வதற்கு அருகில் ஏதேனும் சுவர் இருக்கிறதா என்று பார்க்கத் தோன்றும்.

இந்த ஓட்டை ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு இல்லாத படம் காட்டுவார்கள். பள்ளிக்குள், தமிழ் வகுப்பைத் தவிர மாற்ற வகுப்புகளிலும், பள்ளி வளாகத்திலும் தமிழில் பேசக்கூடாது. மீறி யாராவது பேசினால், உடனடி தண்டனை. அந்தக் கொடுமையான ஆங்கிலத்தைக் கேட்பதற்கு அந்த தண்டனையே மேலாகயிருக்கும். அதிகமாக மீறப்படும் விதிமுறையும் இதுவாகத்தான் இருக்கும். ஆசிரியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தக் கடுமையான(?) விதிமுறையினால், நாங்கள் அனைவரும் எப்போதுமே 'பீட்டர்' விட்டுக்கொண்டு திரிவோம் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.

காலை 9.15 க்கு பிரேயர் தொடங்கும். அனைவரும் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும். அரை மணி நேரம் நடக்கும் பிரேயரில், முதல் கால் மணி நேரம் இயேசு கிறிஸ்துவின் பாடல்கள்(மட்டுமே) பாடப்படும். அடுத்த கால் மணி நேரம், பைபிள் வாசிக்க வேண்டும். லேட்டாக வருபவர்களுக்குத் தனியாக பிரேயர் நடக்கும். அதைத் தனியாக நடத்துபவர் தான் எங்கள் பள்ளியின் 'அஞ்சா நெஞ்சன்', 'பீட்டர்' நாயகன், திரு. ஒழுக்க வாத்தியார் அவர்கள். அதாவது 'டிசிப்ளின் சார்'. இப்படி செல்லமாக(?) இவர் அழைக்கப் பட்டாலும், இவரது உண்மையான பெயர் பல பேருக்குத் தெரியாது. எனக்கும் தான். இவரைப் பற்றி, பின்னால் பார்க்கலாம்.

யாரும் ‘இல்லை’ என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்க்காக, "லைப்ரரி" க்கென்று ஒரு சிறிய அறையை ஒதுக்கியிருப்பர்கள். வாங்கிய புத்தகத்தை ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். இல்லையென்றால், ஆயா மூலம் வகுப்பிற்கு தூது விடப்படும். சொற்ப நூல்களுடன் இயங்கிய அந்த "so called" லைப்ரரியை என்னைப் போன்ற முன்னாள் மாணவர்கள் மறந்தே போயிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

எங்கள் பள்ளியின் விளையாட்டு மைதானம், ஒரு தீவு போல காட்சி அளிக்கும். சுற்றிலும் கீற்றுக் கொட்டகையில் வகுப்புகள். நடுவில் மைதானம். அங்கு விளையாடப்படும் அதிகபட்ச விளையாட்டுக்கள் - பாட்மின்டன் மற்றும் கிரிக்கெட். எப்போதாவது நடக்கும் 'ஸ்போர்ட்ஸ் டே' அன்று ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போன்றவை போக, பாட்மின்டன் மட்டும் நடக்கும். கிரிக்கெட் போட்டிகள் பள்ளியில் நடந்ததே இல்லை. ஆனால், நாங்கள் திருட்டுத்தனமாக அங்கு கிரிக்கெட் விளையாடுவோம்.

இந்த தொடர் முழுக்க, பள்ளியின் பல கேரக்டர்கள் உலா வருவார்கள். அவர்களில் முக்கியமானவர்களைப் பற்றிய அறிமுகம் இங்கே...

முதலில் - மேடம். எங்கள் பள்ளியின் முதல்வர். எப்போதுமே கையில் சாவிக் கொத்தை மாட்டிக் கொண்டு வலம் வருவார். தேவைப்பட்டால் மட்டும் செங்கோலைக்(பிரம்பு) கையில் எடுப்பார். இவரைப் பார்த்தால், மாணவர்கள் மட்டும் அல்ல, ஆசிரியர்களும் 'மம்மி'யைப் பார்த்த எம்.எல்.ஏ வைப் போல பம்முவார்கள்.

மாஸ்டர் - 'ஜான்' பிள்ளையானாலும் 'ஆண்' பிள்ளை என்னும் பழமொழிக்கு இவரை விட ஒரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது. உயரம் கம்மியாக இருந்தாலும், மனதால் உயர்ந்தவர். மின்னலடிக்கும் வெள்ளை நிற சட்டையையும், லூசாகத் தைத்த பேன்ட்டையும் போட்டுக்கொண்டு கையில் செங்கோலுடன் வலம் வருவார். கிட்டத்தட்ட "டி.ஆர்" மாதிரி தாடி வைத்திருப்பார். அதை அடிக்கடி, தடவி விட்டுக்கொண்டிருப்பது இவருடைய மேனரிசம். தாடி வைப்பதே அதற்காகத் தானே. நான் பள்ளியில் படித்த பன்னிரெண்டு ஆண்டுகளில், இவர் எத்தனை முறை சிரித்திருப்பார் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இவர்களுக்கு அடுத்தபடியாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவர் - லீலா மிஸ்.
எலிமெண்டரி ஸ்கூலின் முதல்வர். ஆங்கில ஆசிரியரும் கூட. மாணவர்களிடம் ரொம்பவும் கண்டிப்பாக இல்லாமல் அதே சமயம் ரொம்பவும் ஃபிரீயாகவும் விடாமல் 'balanced' ஆக இருக்கும் கேரக்டர்.

லாஸ்ட், பட் நாட் தி லீஸ்ட் - எங்கள் பள்ளியின் 'டிசிப்ளின்' மாஸ்டர் - இவர், மிலிட்டரி ஹோட்டலில் மாஸ்டராக, ச்சீ... மன்னிக்கவும்...மிலிட்டரியில் ஆபீசராக இருந்து ஓய்வு பெற்றவர். எப்போதுமே மிடுக்கான உடையில் காணப்படுவார். கையில் செங்கோல் இல்லாமல் இவரைப் பார்க்கவே முடியாது. இவரது முக்கியமான வேலை, எங்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது. பொழுதுபோக்கு - வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ரவுண்ட்ஸ் வந்து, ஆசிரியருக்கு டிமிக்கி குடுத்து விட்டு வகுப்பறையில் சேட்டை செய்யும் மாணவர்களை அமுக்குவது. இவர் உடம்பில் எங்கு அடிப்பார் என்று எவராலும் கூற முடியாது. பிரம்பை சாட்டையாகக் கருதி, கண் மண் தெரியாமல் அடிப்பார்....

இவர்கள் தான் பள்ளியின் பெரிய தலைகள். பள்ளியைப்பற்றிய மற்ற தகவல்கள் எல்லாம், இடைச்செருகல்களாக அவ்வப்போது வரும். 'சேட்டைய' ராஜாக்களின் அறிமுகம் அடுத்த பதிவில்....

12 comments:

Rakul005 said...

நல்ல முயற்சி.... இன்னும் கொஞ்சம் descriptiveஆக எழுதியிருக்கலாம் என்பது என் கருத்து. நான் இரு முறை உங்கள் பள்ளியை நேரில் பார்த்ததினாலோ என்னவோ, இன்பர்மேஷன் புதிதாகத் தெரியவில்லை. ஆனால் overall ok, எனக்கு இதில் வரப்போகும் கேரக்டர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளத்தான் ஆர்வம். அதை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்

Gowri Shankar said...

@rakul
//இன்னும் கொஞ்சம் descriptiveஆக எழுதியிருக்கலாம் என்பது என் கருத்து//


கதைக் களம் பள்ளியை சுற்றியே நகருவதால், எங்கள் பள்ளியைப் பற்றித் தெரியாதவர்களுக்காக என்னால் முடிந்த வரையில் ஒரு சிறிய அறிமுகம் கொடுத்தேன். இதற்கு மேலும் வர்ணிப்பதற்கு அது என்ன தாஜ் மஹாலா? இதை விட விலாவரியாக எழுதினால் 'போர் அடிக்குது' என்று போய் விடுவார்கள். உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி. அடுத்த பதிவில் உங்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படும் :)

Vignesh Page said...

Hai da....
My school also same like ur school..But there am in hostel so we enjoyed a lot....If we talk to girls then one week suspend this s the punnishment we faced there..very strict..if we talk tamil, we took neem leaves this s also a punnishment...But We enjoyed lot and did all naughty things but this s not rite place to put all those things...will tell u when we talk...

Anonymous said...

dei, your descriptions very much reflects what our school students feel about our madam and master. very hilarious. it is really good, but if someone already knows abt our school, they can enjoy a lot than other readers.

Unknown said...

hey gowri title - very gud selection....

ne pannna chetaiku sariya porundhum...

mrng prayer kooda thaniyathan nadakumaaaa>?
enna kodumai gowri ithu???

un eluthu vadivathileye un chetaiellam theriyuthu especially

'டிசிப்ளின்' மாஸ்டர் - இவர், மிலிட்டரி ஹோட்டலில் மாஸ்டராக, ச்சீ... மன்னிக்கவும்...மிலிட்டரியில் ஆபீசராக இருந்து

paavam andha military master...

unathu padaipugal vetri pera enathu vaazhthukal...

Unknown said...

hii dha...
i've visited ur skool many times...and even seen ur acts thro videos ;)... The way you've described the teacher characters of ur skool are very funny and very easy to imagine how tey wud hav been...

lukin forward to the main characters... maintain the same flow of describing them....!!!


>>Laffter<<

Anonymous said...

Gowrisankar....
Good man. remembering my schooldays....

CTKMS passout guys, whomever c this defiently they will remember wht all they did in school

continue waiting to read....

Anonymous said...

gowri paeriya eluthalar rangekku eluthirukkae... congrats.. dat is cool

Anonymous said...

really u ve an artistic talents..super!

Daydreamer said...

Hi da Gowri,

As I mentioed during our chat, Build up balaamaa irukku daa. So expectations are at a high.

Though I have missed the major 'Saettai Kaalam'(may be after class 10)that you have mentioned, I am sure I would be able to empathize as well as relish a lot in this series.

BTW, I have very hazy memiores on the Discipline Master or may be I am not even sure of remembering him.

-Sivaguru.

ꢦ꣄ꢬꢨꢸ பிரபு.. said...
This comment has been removed by the author.
ꢦ꣄ꢬꢨꢸ பிரபு.. said...

நல்ல முயற்சி
ஆரம்ப build up அருமை
'நான் சொன்னதையும் செய்ய மாட்டேன், சொல்லாததையும் செய்ய மாட்டேன்'
அனைவரும் கடைபிடிக்க வேண்டியது ஹி.. ஹி...