வாழ்க தமிழ்!
"எனக்கு தமிழ் தெரியாது" - இன்றைய தலைமுறையினர் இப்படி சொல்லிக்கொள்வதில் பெருமை பட்டுக்கொள்கிறார்கள்...! இதில் வேதனையான விஷயம் என்னவெனில், பிள்ளைகள் இப்படிக் கூறுவதில் பெற்றோர்களும் பெருமை அடைவதே! பள்ளிகளில் ஆங்கிலத்தைத் தவிர இரெண்டாவது மொழியாக தமிழை தேர்ந்தெடுப்பதை விடுத்து மற்ற மொழிகளை தேர்ந்தெடுக்க பெற்றோர்களே ஊக்குவிக்கிறார்கள். மற்ற மொழிகளில் மதிப்பெண்கள் அதிகம் பெறலாம் என்கிற சப்பைக்கட்டு வேறு! ஃபிரெஞ்ச், ஹிந்தி போன்ற மொழிகள் நமக்கு என்னதான் அந்நிய மொழிகளாக இருந்தாலும், அவற்றை கற்க காட்டும் ஆர்வத்தில் பாதி கூட தமிழ் கற்கக் காட்ட மறுக்கின்றனர். இதற்கு பெற்றோர்களே முக்கிய காரணம். தமிழ்ப் பாடம் கற்பது கடினம் என்று கூறுபவர்கள், ஃபிரெஞ்ச் போன்ற மொழிகளை மட்டும் சிரமமின்றி கற்பது எப்படி? கணக்குப் பாடம் கஷ்டமாக இருக்கிறது என்று, அதை புறக்கணிக்க முடியுமா? தமிழிற்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை?
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழ் கற்பது கேவலம் என்று நினைப்பவர்களை என்ன சொல்வது? கர்நாடகம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், பெங்களூர் என்னதான் மென்பொருள் துறையின் பிரதான இடமாக இருந்தாலும், அங்கு கன்னடதிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நீங்கள் வேறு கிரகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அங்குள்ள பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்பினால், அவர்கள் கன்னடம் கட்டாயமாகக் கற்க வேண்டும். வேறு வழியே கிடையாது! அங்கு வசிக்கும் மக்கள், தங்கள் தாய்மொழியை கற்பதை கேவலமாக நினைப்பதில்லை. அந்த அவலம் தமிழகதிற்கு மட்டும் தான்!
இதே போன்று, தமிழ் புத்தகங்களைப் படிப்பது, தமிழ் இசை கேட்பது, தமிழ் படங்களை பார்ப்பது இவை அனைத்தையும் கௌரவப் பிரச்சனையாகக் கருதுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். குழந்தைப் பருவத்திலிருந்தே தமிழ் கற்கும் ஆர்வத்தை ஊட்ட வேண்டும். A,B,C சொல்லிக் கொடுக்கும் போதே, அ,ஆ,இ சொல்லிக்கொடுக்க வேண்டும்.
தமிழை வளர்க்கிறோம் பேர்வழி என்று, "அனைத்திலும் தமிழ்" என்று கோஷம் போட்டுக்கொண்டு அலையும் அரசியல்வாதிகள், வாகனங்களின் எண் பலகையை தமிழில் தான் எழுத வேண்டும் போன்ற பயனற்ற கோரிக்கைகள் எழுப்புவதை நிறுத்திவிட்டு இத்தகைய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
உண்மையில், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழ் தெரியாது என்று சொல்வதே வெட்கக் கேடு!
பி.கு :- அரசியல்வாதிகளைப் போல், நான் ஆங்கிலத்தை எதிர்க்கவில்லை. ஆனால், தமிழை புறக்கணிப்பது தவறு என்பதை சுட்டிக்காட்டுவதே என் நோக்கம்.
7 comments:
Tamil Mozhi aan thaai Mozhi ...
Tamil maal ullaa uun aarvathium athaan maal ullaa paatraium paarkumbothu...Wow anruu sollum alavirkku nee aarpaduthiveetai...
nee soonaa kaaruthaai Makkal anaivarum saattru seenthikkaa vandummm...
Valghaaa Tamil
Valarghaa Tamil
எந்த ஒரு தேசத்தை சேர்ந்தவனும், தன் தாய்மொழின் தொன்மை / அருமை / பெருமையை உணராதபோது,அவன்
அந்த சமுதாயத்தை உணராமல் போகிறான் என்பது தான் உண்மை. தாய்மொழியில் புலமை இருந்தால்தான் தன் இனத்தை பற்றியும் பாரம்பரியம் பற்றியும் தெரியும், தம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை பற்றி தெரியும். தாய்மொழியை புறக்கணிபபது என்பது பிறந்த குழந்தை தாய்ப்பால் புறக்கணிபபதற்கு சமம்.
எனக்கு தமிழ் தெரியும் என்பதை குறித்து இப்பொழுது
பெருமை படுகிறேன் ..... வாழ்க தமிழ்..!!!!
dae nalla oru thuvakkam.....
i didnt get tamil editor so bear with english....
All your views are good.
those punishments which we used to get for just speaking tamil in school flashed across my mind when i was reading this.
What is the solution??
We as a true tamizhan should take responsibility on our shoulders to have our children, relatives to be bruoght up learning tamil. If we start this now we will definitely win the situation.
If it is going to be just talking or writing we cant save Tamil....
அருமையான கருத்து...
இன்னும் நிறைய கருத்துக்களை சொல்லியிருக்கலாம். நீளமான கட்டுரையைப் படிக்க பலர் விரும்புவதில்லை. தமிழைப் பற்றி தெரிந்து கொள்ள யாருக்கும் இங்கு பொறுமை இல்லை...!
26 alphabets,limited grammer, Excellent mode of communication widely used over earth... its ENGLISH.
uh..... well its not ours.
So we start learning a far more complex language tamil...(difficult for me). Somehow i hated tamil. never got above 50marks. English medium skooling for all 12 years..
Never bothered about tamil...
And in a great country like INDIA which supports over 200 different languages, it wud b easy to loose this language at this rate of adultration with english...
If i were to suggest a solution,
it wud b about making more movies like "23 Pulikaesi" the movie that had such a great impact, by creating an afiinity towards tamil...
And also the program in suryan fm of making people speak in tamil for 60sec...
" people hardly succeed" :-(
Its not funny anymore, words exists in my mothertongue whose meaning i am not aware of....
Indhiyaavil irundhavarai tamizl pidikkavillai. Velzinaadu sendra undan tamizlai thedinaen, sendhamizl meethu naatam kondaen.
PULIKEASI pola paesa aasaipattaen avvaru paesavum thodanginaen..
Ithu unmai...
Tamil sariyaaga ezutha theriyatha kaaranathinaal aangilathai payanpadhutha thallappattaen...migavum varunthugiraen ennai manikkavum
hey gowri!!!nalla karuthu...nan kuda silla naal feel panuven...tamilnadulla irunthukittae tamil padika matrangalenu..inum oru kalam varalam,tamil pesinaal kevalamaga parkalam silar...inum koncham neraiya karuthukalai share panirukalam..short ah iruku..gud work.
nan tamil ah than type pananum nu nenachen..but en tamil ah pathi than unaku theriyume...nice that u wrote abt this too.. ;).
Post a Comment