முன்குறிப்பு : இது காதலைப் பற்றிய கட்டுரை அல்ல...
தயக்கம் - பல சமயங்களில் நம்மை முடக்கிப்போட்டு விடுகிறது. எந்த விஷயத்தில் தயக்கம் காட்டினாலும், அன்பை வெளிக்காட்டுவதில் மட்டும் தயக்கம் வேண்டாமே ப்ளீஸ்... ஒருவரை உங்களுக்குப் பிடிக்கும் என்றால், கொஞ்சம் கூட தயங்காமல் உங்கள் அன்பை அந்த நபரிடம் வெளிப்படுத்துங்கள். அது உங்களைப் பற்றி ஒரு நல்ல பிம்பதை ஏற்படுத்துவதுடன், ஒரு அருமயான உறவு மலர்வதற்க்கும் வழிவகுக்கும். அன்பை நெஞ்சில் அடைத்து வைத்துக்கொண்டு இருப்பதில் எந்த லாபமும் இல்லை. நான் பல குடும்பங்களில் பார்த்திருக்கிறேன்... செல்லம் கொடுத்தால் குழந்தைகள் கெட்டுவிடுவார்கள் என்பதால், எவ்வளவு அன்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் குழந்தைகளிடம் கண்டிப்புடன் இருப்பார்கள். குழந்தைகள் வளர்ந்த பின், அந்த கண்டிப்பை வெறுக்கத்தொடங்குவதுடன் பெற்றோரயும் வெறுக்கத்தொடங்குவார்கள். ஒரு கட்டத்தில், பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாசத்துக்காக ஏங்கும் போது அதை உணரும் நிலையில் பிள்ளைகள் இருக்கமாட்டார்கள்.குழந்தைகளுக்கு அந்தந்த வயதில் கிடைக்க வேண்டிய அன்பு நிச்சயமாகக் கிடைக்க வேண்டும். என்னதான் நீங்கள் உண்மையான அன்பு வைத்திருந்தாலும் அதை வெளிக்காட்டாத வரையில் அதற்கு மதிப்பே இல்லை!
பெற்றோர்-பிள்ளைகள் உறவு என்றில்லை... உலகில் கிட்டத்தட்ட எல்லா உறவுகளுக்கும் இது பொருந்தும்.
பரிசுப்பொருட்கள், வாழ்த்து அட்டைகள் மட்டுமில்லாமல் இன்றய நவீன யுகத்தில அன்பை வெளிப்படுத்த எவ்வளவோ வழிகள் இருக்கின்றன! ஏதோ எனக்குத் தெரிந்த சில...
இ-மெய்ல் அனுப்பலாம், sms(வெறும் forward மெஸேஜ் இல்லாமல், ப்ரத்யோக sms) மூலம் உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம்... 100 forwards அனுப்புவதற்கு பதிலாக நீங்கள் ப்ரத்யோகமாக டைப் செய்த ஒரே ஒரு மெஸேஜ் மட்டும் உங்கள் நண்பருக்கு அனுப்பினால், அதன் மதிப்பே தனி. இது உங்களுக்கு silly யாகத் தோன்றினாலும், உங்கள் நண்பர் பூரித்துப்போவார். அதை உணரும் போது தான் புரியும்(நான் உணர்ந்திருக்கிறேன்).
நண்பர்கள் மொபைலில் உங்களை அழைக்கும்போது தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர, வேறு எக்காரணம் கொண்டும் அழைப்பை துண்டிக்காதீர்கள். பொதுவாக அழைப்பை நாம் துண்டித்தால், அழைத்தவருக்கு எரிச்சல் ஏற்படும். அப்படியே துண்டித்தாலும், உங்கள் வேலை முடிந்தவுடன் உடனே தொடர்புகொண்டு பேசுங்கள். இதே போல், நண்பரின் missed call இருந்தாலும் உடனே தொடர்புகொள்ளுங்கள். அது அவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அக்கறையைக் காட்டும்.
பிறந்த நாள்,புத்தாண்டு போன்ற நாட்களில், உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க மறக்காதீர்கள். நண்பர்கள் முக்கியமாக இதனை எதிர்ப்பார்ப்பார்கள்.
ஆண்-பெண் நட்பில், பொதுவாக ’ஈகோ’ பிரச்சனை தலைவிரித்து ஆடும். பொதுவாக, பெண்களிடம் "ஆண்களைப் பற்றி உயர்வாக பேசினால், அவர்களுக்கு தலைக்கு மேல் ஏறிவிடும்" என்கிற மனப்பான்மை உண்டு. இதுவே பிரச்சனைக்கு முக்கிய அடித்தளமாக அமைகிறது. இருவரும் வெளிப்படையாக அதே சமயம் ப்ராக்டிகலாகவும் பேசிக்கொண்டால், பிரச்சனை வரவே வராது. பாராட்ட வேண்டிய தருணத்தில் மனம் திறந்து பாராட்டுங்கள், அதே சமயம், தவறை சுட்டிக்காட்டவும் தயங்காதீர்கள்.
’ஈகோ’வைத்தூக்கி எறிந்தால் தயக்கம் காணாமல் போய்விடும்.
உறவில் விரிசல் விழுந்த பிறகு "நான் உன்மேல எவ்வளவு பாசம் வெச்சிருந்தேன் தெரியுமா?" போன்ற டயலாக்குகள் எல்லாம் பயன் தராது. சில சமயங்களில் உங்கள் அன்பு உரியவரிடம் கடைசிவரை சென்று சேராமல் போய்விடும் வாய்ப்பும் இருக்கிறது. சரியான சமயத்தில் வெளிப்படாத அன்பு, கடைசிவரை ஏற்கப்படாமலேயே போகும் அபாயமும் உண்டு.
காசா? பணமா? அன்பை பறிமாறிக்கொள்வதில் எதற்கு தயக்கம்? அன்பால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை.
பின்குறிப்பு: என்னடா இவன், திடீர்னு இந்த மாதிரி டாபிக்ல எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டான்னு நினைக்கிறவங்களுக்கு...
ரஜினி, கிரிக்கெட், hinduism - இம்மூன்றும் என்னுடைய அபிமான தலைப்புகள். இவற்றைத் தவிர வேறு தலைப்புகளிலும் எழுதி அந்த வட்டத்திலிருந்து வெளியில் வருவதற்கான முதல் முயற்சி. தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். விமர்சனங்கள், கருதுக்கள் வரவேற்கப்படும்....