-தலைப்பு இன்னும் முடிவாகல-
வணக்கம்...!
என் ஸ்கூல் லைஃப், காலேஜ் லைஃப் - இதுல எது பெஸ்ட்னு கேட்டா, சந்தேகமே இல்லாம ஸ்கூல் லைஃப்-னு தான் சொல்லுவேன். ஸ்கூல்ல தான் முதன் முதலா எல்லாருக்கும் பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ் கிடைப்பாங்க... எனக்கும் அப்படி தான்.... ஸ்கூலுக்கும் காலேஜுக்கும் இருக்குற பெரிய வித்தியாசம் - நண்பர்களுக்குள்ள இருக்குற ஈகோ, பாலிடிக்ஸ், கேங்-வார், இதெல்லாம் தான். எனக்கு ஸ்கூல்ல சூப்பர் ஃபிரெண்ட்ஸ் கிடைச்சாங்க.
10வது படிக்கும் போது ஆரம்பிச்ச நட்பு, நாட்கள் போக போக, காலம் எங்களை இன்னும் நெருங்கிய நண்பர்களா ஆக்கியது. காலேஜ்ல எங்களுக்கு எத்தனையோ நண்பர்கள் கிடைச்சாலும், இந்த நாள் வரைக்கும் நாங்க எல்லாரும், அதே மாதிரி நெருங்கிய நண்பர்களா தான் இருக்கோம்.
நாங்க ஆறு பேர். எங்களுக்கு பயமே கிடையாது. எப்பவுமே ஒண்ணா தான் சுத்துவோம். எங்க ஸ்கூல்ல கேங் வார், கோல்ட் வார், செருப்பு வார், இப்படி எந்த வாரும் இருந்ததில்ல... ஏன்னா, ஒட்டு மொத்த ஸ்கூலுக்கும் தலைவலி குடுத்துகிட்டு இருந்தது, எங்க கேங் மட்டும் தான். என் ஸ்கூல் டேஸ்ல நடந்த சம்பவங்களை எல்லாம் தொகுத்து எழுதலாம்னு இருக்கேன். இப்படி ஒரு ஐடியா வந்ததுக்கு முக்கியமான காரணம் அல்லது இன்ஸ்பிரேஷன் - மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள். அவருடைய "ஸ்ரீரங்கத்து கதைகள்" படிச்சிட்டு பிரமிச்சிருக்கேன்.
பி.கு : இன்ஸ்பிரேஷன் சுஜாதான்னு போட்டதால நல்லா இருக்கணும்னு அவசியம் இல்ல.
இந்த ஐடியாவ என் கேங் மெம்பர்ஸ் கிட்ட சொன்னப்போ, அவங்க குடுத்த வெவ்வேற ரியாக்ஷன்ஸ் ...
"அடப்பாவி....எல்லா உண்மையையும் சொல்லிடாத டா" ,
"சூப்பர்.... அமோக வரவேற்பு கிடைக்கும்...",
“சூப்பர் டா... கண்டிப்பா எழுது, ஆனா நான் தான் ஹீரோ...”
"டேய்...மானம் போய்டும்",
இப்படி ஆளாளுக்கு ஒவ்வொண்ணு சொன்னாங்க. கடைசில எல்லாருமே போட்டி போட்டுக்கிட்டு, "இது ஞாபகம் இருக்கா?", "இதை பத்தி எழுது, அதை பத்தி எழுது"னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.... எல்லாருடைய "இன்புட்ஸ்" ஐயும் வாங்கி, எழுதலாம் னு இருக்கேன். "ஏதோ பண்ணு, அவுட்புட் நல்லா வந்தா சரி" னு அவங்களும் ஒத்துக்கிட்டாங்க...
எழுதுறதுன்னு முடிவு பண்ணியாச்சு... ஒரு தலைப்பு வேணுமே?? அந்த விவாதம் தான் இப்போ நடந்துக்கிட்டு இருக்கு... ஒவ்வொருத்தன் ஒவ்வொண்ணு சொல்லறான்... கூடிய சீக்கிரமே கலந்து பேசி, ஒரு நல்ல பேரு வெச்சிருவோம். அது "கும்பகோணம் கும்மாங்கோ" ன்னும் இருக்கலாம், இல்லேனா "வெங்காயம்" ன்னும் இருக்கலாம். அவ்வளவு பெரிய கம்பெனிக்கே "ஆப்பிள்" னு பேர் வைக்கும் போது, இதுக்கு "வெங்காயம்" னு வைக்கக்கூடாதா என்ன? இதுக்கு வரிவிலக்கு பிரச்சனை எல்லாம் இல்ல... எப்படி வேணும்னாலும் வைக்கலாம்...
இதுல வரப்போற முக்கியமான கேரக்டர்களுடைய அறிமுகம், எங்க ஸ்கூல் பற்றிய விவரம், இதெல்லாம் அடுத்த பதிவில்....